Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயில், Olagadam, Bhavani - 638314, ஈரோடு .
Arulmigu Chokkanatchiamman Temple, Olagadam, Bhavani - 638314, Erode District [TM010332]
×
Temple History

தல வரலாறு

தமிழகத்தில் பழமையும் வளமையும் நிறைந்த கொங்கு நாட்டில் பெருமையுடையதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் பவானி வட்டம், ஒலகடம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக் கோயிலும் ஒன்று. மக்களின் பக்திப்பெருக்கால் இத்திருக்கோவிலில் திருவிழாக்களும், பண்டிகைகளும் சிறப்போடு தொன்றுதொட்டு நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். இத்திருக்கோவிலில் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் மூலவராக காட்சியளித்து அன்பர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியாங்கு ஈயும் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்து தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்து ஊர் மக்களால் சிறிதாக இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது என செவிவழிச் செய்தியாக அறியமுடிகிறது.

தல பெருமை

அருள்மிகு சொக்கநாச்சி அம்மன்