Screen Reader Access     A-AA+
அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோயில், Olagadam, Bhavani - 638314, ஈரோடு .
Arulmigu Chokkanatchiamman Temple, Olagadam, Bhavani - 638314, Erode District [TM010332]
×

Poojas

Festivals

e-Services

Donation

360 Degree View

About Temple

தமிழகத்தில் பழமையும் வளமையும் நிறைந்த கொங்கு நாட்டில் பெருமையுடையதும் வரலாற்றுச் சிறப்புடையதுமான திருக்கோவில்கள் பல உள்ளன. அவற்றில் பவானி வட்டம், ஒலகடம் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக் கோயிலும் ஒன்று. மக்களின் பக்திப்பெருக்கால் இத்திருக்கோவிலில் திருவிழாக்களும், பண்டிகைகளும் சிறப்போடு தொன்றுதொட்டு நடைபெற்று வருவது பெருமைக்குரியதாகும். இத்திருக்கோவிலில் அருள்மிகு சொக்கநாச்சியம்மன் மூலவராக காட்சியளித்து அன்பர்களுக்கு வேண்டியவற்றை வேண்டியாங்கு ஈயும் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து வருகிறாள். இத்திருக்கோயில் சுமார் இருநூறு வருடங்களுக்கு முன்பு பக்தர்களுக்கு அம்மன் காட்சி அளித்து தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு பணித்து ஊர் மக்களால் சிறிதாக இத்தலம் அமைக்கப்பட்டுள்ளது என செவிவழிச் செய்தியாக அறியமுடிகிறது. இத்திருக்கோயில்ஸ்ரீ ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் பதினெட்டாம் நாள் 01.05.2017 திங்கட்கிழமை அன்று வளர்பிறை சஷ்டி திதியும் புனர்பூச நட்சத்திரமும் சித்த...

Additional Service

  • அறிக்கை பலகை
  • ஆறாம் திருமுறை
  • இணைப்புகள்
  • அழைப்புகள்
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 12:00 PM IST
04:00 PM IST - 08:30 PM IST
08:30 PM IST - 08:30 PM IST
அருள்மிகு சொக்கநாச்சியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதந்தோறும் அமாவாசை அன்றும் பவுர்ணமி அன்றும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகம் நடைபெறும், சித்திரை மாதம் சித்ரா பவுர்ணமி அன்றும் ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கு அன்றும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்தன்றும் மார்கழி மாதம் இரண்டு கால சிறப்பு பூஜையும் இரவு நேர பஜனையும் பாடல்களும் நடைபெற்றுவருகிறது. ஏகாதசி பூஜையும் சிறப்பாக நடைபெறுகிறது. தைமாசம் பூசத்தன்றும் மாசி மாதம் சிவராத்திரி என்றும் பங்குனி உத்திரத்தன்றும் சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் மிக விமர்சையாக நடைபெறும் இதர விசேஷங்களும் அம்பிகைக்கு அபிஷேகம் மகா தீபாரதனை நடைபெறும். வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகுகால பூஜை சிறப்பாக நடைபெறும்.