மூர்த்தி காவிரி தீர்த்தம் என்பவற்றால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன் பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட நடுவில் உயர்ந்து அகத்தியர் வியாக்ரபாதர்பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறை மீது அமைந்து உள்ளது நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில். காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால் இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி மண் தலமாகக் கருதி வழிபடப் படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில்...மூர்த்தி காவிரி தீர்த்தம் என்பவற்றால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன் பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட நடுவில் உயர்ந்து அகத்தியர் வியாக்ரபாதர்பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறை மீது அமைந்து உள்ளது நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவில். காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது ஓம்கார வடிவில் அமைந்த கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால் இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி மண் தலமாகக் கருதி வழிபடப் படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். தற்போது மக்கள் நலன் கருதி பாலம் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோயில் இருகரைகளுக்கு இடையிலும் நடு ஆற்றில் அமைந்துள்ள பகுதியாக இருப்பதால் நடு ஆற்று ஈஸ்வரர் என்ற காரணப்பெயர் நட்டாற்று ஈஸ்வரர் என வழங்கி வருகிறது. இந்த நட்டாற்றீஸ்வரர் யாரும் செய்து வைத்த லிங்கம் அல்ல. அகத்தியரால் பூஜைக்கென உருவாக்கப்பட்டு வணங்கப்பட்ட லிங்கமாகும்.சின்னமைந்தன் முருகன் வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது முருகன் அவரை முன்னின்று வரவேற்று அழைத்து வந்து நடுஆற்றின் நடுவில் அமைந்து இருந்த குன்றைக் காட்டி அங்கு காட்டியதால் இக்கோலத்தில் நடக்கும் பாவனையில் காட்சி தருகின்றார். இவர் இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். .இதுதகப்பன் சாமி எனப் பெயர் பெற்ற ஞானஸ்கந்தன் என்னும் முருகப் பெருமானின் ஞானக் கோலம் ஆகும்