Screen Reader Access     A-AA+
அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில், கேகே நகர், சென்னை - 600078, சென்னை .
Arulmigu Sakthi Vinayagar Temple, K.K.Nagar, Chennai - 600078, Chennai District [TM000115]
×
Temple History

தல வரலாறு

தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரம் தன் எல்லைகளை விரித்துக் கொண்டே போனது. மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பட்டணத்துப் பரப்பு பெருகியது மக்களும் பெருகினர் இந்த பெருக்கத்தின் வெளிப்பாட்டில் வெளிச்சமிட்டது தான் கே.கே.நகர். நகரின் சாலைகளும், வீதிகளும் தமிழ்ச் சான்றோர்களின் பெயர்களைத் தாங்கித்தாங்கி மகிழ்கின்றன. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது இந்த மண்ணின் பண்பாட்டு நெறி, இந்த உணர்வு இங்கு வசித்த பெரும்பகுதியான மக்களின் உள்ளத்தில் அலையாக அல்ல அனலாக எழும்பி வெளிப்பட்டது. 1971-ம் ஆண்டு ஜுன் 3-ம் நாள் இந்த மண்ணிற்கு மகத்துவம் பிறந்தன. ஆன்மீக நெறியாளர்களின் எண்ணங்கள் மறுமலர்ச்சி முளைத்தன. வழிபடும் தெய்வம் வரவேண்டும் நமக்கு என்ற சிந்தனை ஊர் மக்களிடம் சிறகு விரித்த...