சென்னை 78, கே.கே.நகர், பி.டி.ராஜன் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46-ன் கீழ் விளம்புகை செய்யப்பட்ட பட்டியல் சார்ந்த திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் செயல் அலுவலர் (நிலை -3) மற்றும் தக்கார் நிலையில் சென்னை 107, கோயம்பேடு, அருள்மிகு குறுங்காலீஸ்வரர் மற்றும் வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலின் செயல் அலுவலர் ஆகியோரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.