அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் ரெங்கநாதபெருமாள் திருக்கோயில், முருங்கத்தொழுவு - 638051, ஈரோடு .
Arulmigu Brammalingeswarar Renganathaperumal Temple, Murungatholuvu - 638051, Erode District [TM011816]
×
Temple History
தல வரலாறு
ஸ்தல வரலாறு
படைக்கும் கடவுள் பிரம்மா வழிபட்ட ஸ்தலம் அதனால் பரம்பொருள் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் சுவாமி என்ற திருப்பெயர் பெற்றார். இத்திருத்தலம் அமைந்துள்ள ஊர் முருங்கத்தொழுவு சென்னிமலை முருகன் இத்திருத்தலத்தில் உள்ள பரம்பொருளை வழிபட்ட காரணத்தால் இந்த ஊருக்கு முருகன் தொழுவு காலபோக்கில் மருவி முருங்கத்தொழுவு என பெயர் பெற்றது.
திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்கள் வழிபட்ட இத்திருத்தலம் மேற்கு நோக்கிய அரிய சிவஸ்தலமாக விளங்குகிறது. இச்சா சக்தி, கிரியா சக்கி, ஞான சக்தி என்ற மூன்று சக்தி வடிவமாக திகழும் அன்னை பராசக்தி இத்திருத்தலத்தில் ஞானசக்தி ரூபமாக ஸ்ரீ வடிவுள்ள மங்கையாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
இத்திருத்தலத்தில் தலவிருச்சமாக வில்வ மரம் நெடுங்காலமாக உள்ளது. இத்திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர்...ஸ்தல வரலாறு
படைக்கும் கடவுள் பிரம்மா வழிபட்ட ஸ்தலம் அதனால் பரம்பொருள் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் சுவாமி என்ற திருப்பெயர் பெற்றார். இத்திருத்தலம் அமைந்துள்ள ஊர் முருங்கத்தொழுவு சென்னிமலை முருகன் இத்திருத்தலத்தில் உள்ள பரம்பொருளை வழிபட்ட காரணத்தால் இந்த ஊருக்கு முருகன் தொழுவு காலபோக்கில் மருவி முருங்கத்தொழுவு என பெயர் பெற்றது.
திருமால் உள்ளிட்ட ஏனைய தெய்வங்கள் வழிபட்ட இத்திருத்தலம் மேற்கு நோக்கிய அரிய சிவஸ்தலமாக விளங்குகிறது. இச்சா சக்தி, கிரியா சக்கி, ஞான சக்தி என்ற மூன்று சக்தி வடிவமாக திகழும் அன்னை பராசக்தி இத்திருத்தலத்தில் ஞானசக்தி ரூபமாக ஸ்ரீ வடிவுள்ள மங்கையாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
இத்திருத்தலத்தில் தலவிருச்சமாக வில்வ மரம் நெடுங்காலமாக உள்ளது. இத்திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கின்றார். அபிஷேக காலத்தில் இவரைக் கண்கூட தரிசிக்கலாம். இத்திருத்தலம் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சுவாமி சன்னதிக்கு சூரிய வெளிச்சம் இருக்கும்படி கோவில் கட்டப்பட்டுள்ளது.
இத்திருத்தலம் சோழ மன்னன் ஆட்சிகாலத்திற்குட்பட்டவை என கல்வெட்டு ஆராய்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுந்தரபாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் (சுமார் 1200 ஆண்டுகளுக்கு பின்பு) இத்திருக்கோவிலுக்கு பல்வேறு திருப்பணிகள் செய்ததும், ஏராளமான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதும் பல கல்வெட்டுக்கல் வாயிலாக அறிய முடிகிறது.
இந்த கோவிலுக்கு மேற்கே 17 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளது. இத்திருக்குளத்தில் மாலை நேரத்தில் சென்னிமலை திருக்கோவிலில் எரியும் மின் மற்றும் தீப விளக்குகளின் ஒளியானது பிரகாசமாக தெரிவதை இன்றும் கண்கூடாக பார்க்கலாம்.
மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் கெடு பலன்களான திருமணத்தடை, தொழில் வளர்ச்சி இல்லாமை, உடல் நலக்கோளாறுகள், நவக்கிரக தோஷம், புத்திர தோஷம், கண்திருஷ்டி, ஏவல், பில்லி, சூன்யம், தீராப்பகை, வழக்குகள், முன்னோர் சாபம், பித்ரு தோஷம், எதிரிகள் தொல்லை, ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, ஆயுள் தோஷம், அறுபது, எழுபது, எண்பது வயதில் ஆயுள் கண்டாதி தோஷங்கள் விலக, எல்லாம் வல்ல பரம்பொருள் ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வர சுவாமிக்கு 12 வாரம் திங்கள் கிழமைகளில் (சோமவாரம்) ஜாதகருடைய வயதுக்கு ஏற்ப தீபம் ஏற்றி அபிஷேகம் செய்து வில்வ இலையால் ருத்ரதிரிஷதி அர்ச்சனை செய்து விசேஷ பூஜைகள் செய்து வர மேற்படி சொல்லப்பட்ட சகல தோஷங்களும் விலகி பரம்பொருளின் ஆசி கிட்டும்.
மேலும் பிரம்மா சிவபெருமானை பூஜித்து வழிபட்டதால் இந்த திருத்தலத்தில் உங்களுடைய பிறந்த ஜாதகத்தை ஸ்ரீ பிரம்மலிங்கேஸ்வரர் பாதத்தில் வைத்து பூஜித்து எடுத்து வந்தால் வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிறைவும், நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பரம்பொருள் தந்து அருளாசி நல்குவார்.
குறிப்பு தேய்பிறை அஷ்டமி அன்று இத்திருத்தலத்தில் காலபைரவருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் பிரதோஷம், சிவராத்திரி, பௌர்ணமி, அமாவாசை, மாத பிறப்பு, வருட பிறப்பு ஆகிய தினங்களில் சிறப்பான அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.