Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில், சென்னியவலசு - 638052, ஈரோடு .
Arulmigu Mahaliamman Temple, Chenniyavalasu - 638052, Erode District [TM012742]
×
Temple History

தல வரலாறு

ஆலய அமைப்பு இத்திருக்கோயிலின் முன்புறம் ஐந்து அடி உயரமுள்ள கல் ஊஞ்சல், தூரி, ஐந்து அடி உயரமுள்ள சூலாயுதம் பலி பீடத்திற்கு முன் சுமார் 1 அடி உயரமுள்ள சிங்கம் கல் உருவச்சிலை திருக்கோயிலில் மகா மண்டபத்துக்கு வெளியே அமைந்துள்ளது. மகா மண்டபம் அர்த்த மண்டபம் உள்ளது. கருவறையில் சுமார் மூன்று அடி உயரமுள்ள அருள்மிகு கல் உருவச்சிலை வலது கையில் சூலம், தமருகம் இடது கையில் வாசம், கபாலத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் அருள்பாலித்து வருகிறாள்.

தல பெருமை

ஆலய வரலாறு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளும் அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோயில் சுமார் 15 ஆண்டுகள் தொன்மை சிறப்புடையது. இவ்வம்மன் கிழக்கு முகமாக அமர்ந்த திருக்கோலத்தில் மக்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். திருமணத்தடை, குழந்தையின்மை, தடைகளை நீக்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தருகிறாள்.