Screen Reader Access     A-AA+
அருள்மிகு பொன்சோழீஸ்வரர் திருக்கோயில், Pazhamgarai, Avinashi - 641652, திருப்பூர் .
Arulmigu Ponsoleswarar Temple, Pazhamgarai, Avinashi - 641652, Tiruppur District [TM012968]
×
Temple History

தல பெருமை

சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பழங்கரை க்ஷேத்திரம் இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயரால் முன்தோன் றீஸ்வரம் என்று பிரசித்திபெற்று விளங்கியது. கொங்கு சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் பெருமளவில் செய்யப்பட்டதால் இத்தலப் பெருமானுக்கு சோழீஸ்வரர் என்ற திருப்பெயரும் பிற்காலத்தில் வழங்கலாயிற்று. கோள்கள், இப்பேரண்டம், நட்சத்திரங்கள் ஆகியவை தோன்றுவதற்கு முன்பே உள்ளவன் திருக்கயிலைபதியான சிவபெருமான் என்பதால் பழங்கரை பெருமானுக்கு முன்தோன்றீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டதாக சிவஞான யோகிகள் அருளியுள்ளனர். பொன் சோழீஸ்வரர் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கிறோம். கோயிலின் மேற்கில், ஆபத்து காத்த விநாயகர் அழகாக அமர்ந்த நிலையில் தரிசனமளிக்கிறார். இவருக்கு கிழக்குபுறத்தில் அக்னி மாநதி என்ற ஆறு ஓடுகிறது. பல தருணங்களில் மழையினால் வெள்ளம் ஏற்பட்ட காலங்களில் திருக்கோயிலையும், ஊரையும் இந்த விநாயகர் காப்பாற்றியதால் ஆபத்து காத்த விநாயகர் என்ற...