Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுந்தரவாதராஜப் பெருமாள் திருக்கோயில், காங்கேயநல்லூர், காட்பாடி - 632006, வேலூர் .
Arulmigu Sundara Varadaraja Perumal Temple, Kangeyanallur, Katpadi - 632006, Vellore District [TM001353]
×
Temple History

தல வரலாறு

காங்கேயநல்லூர், சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சம்புவராய மன்னரான சகலலோகச் சக்கரவர்த்திகள் வென்று மண் கொண்ட சம்புவராயின் 17-ஆம் ஆட்சியாண்டில் கி.பி.1346 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சுமார் 676 ஆண்டுகள் பழைமையான கோயிலாகும். இக்கோயிலின் வடக்குப்புறம் மற்றும் கிழக்குப்புறச் சுவர்களில் உள்ள கல்வெட்டுக்கள் இக்கருத்தினை உறுதி செய்கின்றது.இவ்வூரில் இருந்த திருவேங்கடமுடையான் என்பவர் தமது ஒரு காணி நிலத்தை 170 வீரசம்பன் குளிகை என்ற பணத்திற்கு விற்று ஸ்ரீமல்லி நாத சதுர் வேதிமங்கலம் மகா சபையாரிடம் கோயிலுக்கு தானமாக ஒப்படைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இக்கல்வெட்டு இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டு சாசனம் தொகுதி -1 ல் வரிசை எண் 52-ஆக வெளியிடப்பட்டடுள்ளது. இத்திருக்கோயிலுக்கு இராஜாகோபுரம் இல்லாததால் திருமுருககிருபானந்தவாரியார்...