அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காங்கேயநல்லூர், காட்பாடி - 632006, வேலூர் .
Arulmigu Subramaniyaswamy Temple, Kangeyanallur, Katpadi - 632006, Vellore District [TM001354]
×
Temple History
தல வரலாறு
காங்கேயநல்லூர், அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் உள்ள மூலவர் சிற்பங்கள் சுமார் 400- ஆண்டுகள் பழமையானது.சீர்மிகு தொண்டை நன்னாட்டில் கலியுக வரதனாம் கந்தக் கடவுளின் நாயகியாம் வள்ளியம்மையாரும் மற்றும் பல சான்றோர் பெருமக்களும் அவதரித்த நன்னாடு. இத்தலத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும் அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையும் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளித்து வருகிறார். அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாளும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.பக்த பிரமுகர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அவதரித்த புனித பூமியாகும் . ஆனால் இக்கோயிலின் கட்டட அமைப்புகள் இவ்வூரில் பிறந்த கிருபானந்தவாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியால் 1924 மற்றும் 1959 -ஆம் ஆண்டுகளில் திருத்தியமைத்துக் கட்டப்பட்டுள்ளது....காங்கேயநல்லூர், அருள்மிகு சுப்பிரமணிசுவாமி திருக்கோயிலில் உள்ள மூலவர் சிற்பங்கள் சுமார் 400- ஆண்டுகள் பழமையானது.சீர்மிகு தொண்டை நன்னாட்டில் கலியுக வரதனாம் கந்தக் கடவுளின் நாயகியாம் வள்ளியம்மையாரும் மற்றும் பல சான்றோர் பெருமக்களும் அவதரித்த நன்னாடு. இத்தலத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும் அத்தகைய சிறப்பு வாய்ந்த திருத்தலத்தில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையும் சுப்பிரமணிய சுவாமியாக காட்சி அளித்து வருகிறார். அருள்மிகு சுந்தர வரதராஜ பெருமாளும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.பக்த பிரமுகர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அவதரித்த புனித பூமியாகும் . ஆனால் இக்கோயிலின் கட்டட அமைப்புகள் இவ்வூரில் பிறந்த கிருபானந்தவாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியால் 1924 மற்றும் 1959 -ஆம் ஆண்டுகளில் திருத்தியமைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளது.இக்கோயிலில் தற்பொழுது உள்ள கட்டட அமைப்பு 98-ஆண்டுகள் மட்டுமே பழமையான கட்டட அமைப்பாகும். இப்பெருமானை தினசரி முனிவர்களும், தேசர்களும் நடு இரவில் வேத ஒலி முழுங்க வழிபாடு செய்து திரும்புதாக ஐதீகம் உள்ளது இங்கு அமைந்துள்ள முருகனின் உருவக்சிலையும், திருத்தணியில் அமைந்துள்ள முருகப்பெருமானின் சிலையும் ஒரே சிற்பியால் அமைக்கப்பட்டதாக செவிவழி மூலம் அறியப்படுகிறது. இத்திருக்கோயிலில் திருப்பணிகள் பல நடத்து 05.06.1933-ல் கும்பாபிஷேகமும், பின்பு 03.07.1958-ல் கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து திருப்பணிகள் பல செய்யப்பட்டு 09.07.1997-ல் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.