அருள்மிகு உத்திரரங்கநாத சுவாமி திருக்கோயில், பள்ளிகொண்டா - 635809, வேலூர் .
Arulmigu Uthira Ranganathar Temple, Pallikonda - 635809, Vellore District [TM001362]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு பள்ளிகொண்டா பெருமாளை வணங்கி மகிழ்ந்து சிறப்பு செய்ய எண்ணி இது தொடர்பாக ஒரு யாகம் செய்ய உத்தேசித்தார் பிரம்மா. பிரம்மா சபையில் எந்த இடத்தில் யாகம் செய்வது என கலந்தாலோசனை செய்யப்பட்டது. மற்ற இடங்களில் நுறு யாகங்கள் செய்வதைவிட சத்யவிரத சேத்திரத்தில் ஒரு யாகம் செய்வது நுறு யாகங்களுக்கு சமமாகும் என்று பிரம்மா சபையில் தீர்மானித்தனர். அதன்படி காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அப்போது ஒருநாள் பிரம்மா சபையில் சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் யார் பெரியவர்கள் என்ற விவாதம் ஏற்பட்டது. பிரம்மா லட்சுமியே உயர்ந்தவர் என தெரிவித்தார். இதைகேட்டு கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மாவைத் துறந்து மேற்கே சென்று நந்திதுர்க்கா மலையில் வசித்து வரலானாள்.
யாகசாலை...அருள்மிகு பள்ளிகொண்டா பெருமாளை வணங்கி மகிழ்ந்து சிறப்பு செய்ய எண்ணி இது தொடர்பாக ஒரு யாகம் செய்ய உத்தேசித்தார் பிரம்மா. பிரம்மா சபையில் எந்த இடத்தில் யாகம் செய்வது என கலந்தாலோசனை செய்யப்பட்டது. மற்ற இடங்களில் நுறு யாகங்கள் செய்வதைவிட சத்யவிரத சேத்திரத்தில் ஒரு யாகம் செய்வது நுறு யாகங்களுக்கு சமமாகும் என்று பிரம்மா சபையில் தீர்மானித்தனர். அதன்படி காஞ்சிபுரத்தில் யாகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
அப்போது ஒருநாள் பிரம்மா சபையில் சரஸ்வதிக்கும் லட்சுமிக்கும் யார் பெரியவர்கள் என்ற விவாதம் ஏற்பட்டது. பிரம்மா லட்சுமியே உயர்ந்தவர் என தெரிவித்தார். இதைகேட்டு கோபம் கொண்ட சரஸ்வதி பிரம்மாவைத் துறந்து மேற்கே சென்று நந்திதுர்க்கா மலையில் வசித்து வரலானாள்.
யாகசாலை நிர்மாணம் பூர்த்தியாகி பிரம்மா சரஸ்வதிதேவியை யாகத்திற்கு அழைக்க, கோபம் தணியாத அவள் யாகத்திற்கு வர மறுத்தாள். யாக நியதிப்படி சமேதராய் இருந்திடல் வேண்டும். எனவே பிரம்மா சாவித்திரி என்ற பெண்ணை மனைவியாகிக் கொண்டு யாகத்தை துவக்கினார். தேவர்களும்இ முனிவர்களும்இ திருக்கைலாய ஞானிகளும் யாகத்தில் கலந்து கொண்டு வெகுவிமரிசையாக யாகம் நடத்து கொண்டிருந்தது. மேன்மேலும் சரஸ்வதியின் கோபம் இதிகப்பட, அசுரர்கள் கொண்டு யாகத்தை தடுத்து நிறுத்த சரஸ்வதியானவள் கூசீரா நதி அல்லது பத்மினி என சொல்லப்படும் பாலாற்றில் பெரு வெள்ளமாக புறப்படும் யாகத்தை அழிக்க முற்பட்டாள். இதையறிந்த பிரம்மா ஸ்ரீமன் நாராயணனை துதிக்க, வேகமாகவரும் வெள்ளப்பெருக்கைத் தடுக்க ஸ்ரீமன் நாராயணன் சயனித்து இருக்க, கரைபுரண்டு வந்த வெள்ளம் தடுக்கப்பட்டு யாகம் இனிதே நடந்து முடிந்தது. இவ்வாறு ஸ்ரீமன் நாராயணன் சயனித்த திருதலங்கள் மூன்று. முதலாவது பள்ளிகொண்டான், இரண்டு திருப்பாற்கடல், மூன்று யதோத்காரி என்னும் சொன்னவண்ணம் செய்த பெருமாள் வாசம் செய்யும் காஞ்சிபுரம். இதில் முதலாவதாக காணப்படுவது வடரங்கம் என்று சொல்லப்படுகின்ற பள்ளிகொண்டான் என்னும் திருத்தலமாகும்.