Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், வள்ளிமலை - 632520, வேலூர் .
Arulmigu Subramaniaswamy Temple, Vallimalai - 632520, Vellore District [TM001388]
×
Temple History

தல வரலாறு

வள்ளி பிறந்த ஊர்

இலக்கிய பின்புலம்

தொண்டை நன்நாட்டில் அமுத வள்ளியும், சுந்தர வள்ளியும் முருகப்பெருமானை மணக்க வேண்டி தவமிருந்து சுந்தரவள்ளி வள்ளிமலையில் மான் வயிற்றில் கருவாகி உருவாகி வள்ளிக்கிழங்கு அடர்ந்த குழியில் பெண் குழந்தையாய் பிறந்தார். அச்சமயம் அப்பகுதியை ஆண்ட வேடுவர் குல அரசன் நம்பிராஜன் வேட்டைக்கு செல்லும்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு அப்பகுதிக்கு சென்று வள்ளி கொடியில் இருந்த குழந்தையை எடுத்து வள்ளி என பெயர்சூட்டி வளர்த்து வந்தார். வள்ளியம்மையும் நன்கு வளர்ந்து வேடர் குல வழக்கப்படி கல்பரண் மீது ஏறி நின்று ஆலோலம் பாடி தினைப்புனம் காத்து வந்தார். இதனை அறிந்த நாரதமுனிவர், முருகப்பெருமானிடம் சென்று தங்களை மணக்க வேண்டி வள்ளிமலையில் வள்ளி பிறந்து வளர்ந்துள்ளார் என்ற செய்தியை கூறினார். இதனை கேட்ட முருகப்பெருமான்...