Screen Reader Access     A-AA+
அருள்மிகு மார்க்கபந்து சுவாமி திருக்கோயில், விரிஞ்சிபுரம் - 632104, வேலூர் .
Arulmigu Margabantheeswarar Temple, Virinjipuram - 632104, Vellore District [TM001390]
×
Temple History

தல வரலாறு

சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளில் ஒருவராகிய சிவபெருமானின் அடி முடி காண்பதற்காக மகாவிஷ்ணூ வராஹ அவதாரமாக அவதரித்து பூமிக்கு அடியில் சென்றும் சிவபெருமானின் திருவடி காண இயலவில்லை. பிரம்மா அன்னப்பறவையின் மீது அமர்ந்து சிவபெருமானின் திருமுடி காண்பதற்காக சென்றும் திருமுடி காண இயலாமையால் இடையில் வந்த தாழம்பூவை கண்டு சிவபெருமானின் திருமுடி கண்டதாக பொய்யுரைக்க கூறியதால் சிவபெருமானால் சாபம்பெற்ற பிரம்மன் தனது சாப விமோட்சனம் நீங்க சிவபெருமானை வேண்டி சிவபெருமான் அருளால் திருவிரிஞ்சையம்பதியில் தீட்சிதர் குலத்தில் சிவசர்மன் எனும் பெயரில் பிரம்மன் அவதரித்து சிவபெருமானுக்கு பூஜை செய்யுங்கால் சிறுவனான் சிவசர்மன் பூஜை செய்வதற்காக இறைவன் தன் திருமுடி சாய்த்ததனால் பிரம்மன் சிவபெருமாணன் திருமுடி கண்ட ஸ்தலம் எனவும் பிரம்மன் சாப விமோட்சனம் பெற்ற...