Screen Reader Access     A-AA+
அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில், தஞ்சாவூர் - 613009, தஞ்சாவூர் .
Arulmigu Sankaranarayanar Temple, Thanjavur - 613009, Thanjavur District [TM013969]
×
Temple History

தல வரலாறு

மகேஸ்வர வடிவங்களில் ஒன்று சங்கர நாராயணர் வடிவம். இது வலப்புறம் சிவமாகவும் இடப்புறம் திருமாலாகவும் தோன்றும் அருள் வடிவம். இக்கோயிலில் எழுந்தருளியிக்கும் சங்கர நாராயணர் சைவ, வைணவ ஒன்றுமையை நிலை நாட்டும் மூர்த்தியாக விளங்குகிறார். ஒரே கல்லில் வலப்பக்கம் ஜடை, கங்கை, சந்திரன், நெற்றிக்கண், திருநீறு, மகர குண்டலம், ருத்ராட்ச மாலை, மழு அபய ஹஸ்தம், புலித்தோல் முதலியவற்றுடன் கூடிய சிவபெருமான் வடிவமும், இடப்பக்ம் கிரீடம், திருநாமம், திருவாபரண்ங்கள், சங்க ஹஸ்தம், பஞ்சகசம் ஆகியவற்றுடன் கூடிய திருமாலாகவும் காட்சியளிக்கிறார். இதற்கேற்ப இருபுறமும் பார்வதி, லட்சுமி உருவங்கள் காட்சி அளிக்கின்றன. இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சி விழாவின்போது சனி பகவான் சர்வ அலங்காரங்களுடன் நான்கு ராஜவீதிகளிலும் உலாவருவது இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்....