தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டதாகும். அவற்றுள் அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சாவூர் நகர் பகுதியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ½ கி.மீ. தொலைவில் நடந்து செல்லும் தொலைவில் உள்ளது. இத்திருக்கோயிலின் சிறப்பு அம்சமாக பார்வதி, மகாலெஷ்மி சமே சங்கரநாராயணர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.