தல வரலாறு

சோழவள நாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளன. உத்தம சோழனின் (மதுராந்தகன்) தாயும், முதலாம் கண்டராதித்த சோழனின் மனைவியுமான செம்பியன் மாதேவியரால் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1907-ஆம் ஆண்டில் மராட்டிய அரசி ஜீஜாம்பாபாய் சாயிபா அவர்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
தல பெருமை

கர்ப்பிணி செட்டிப்பெண் ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்க தென்னங்குலைகளை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் ’குலைவணங்கீஸ்வரர்’ என்றும், சிட்டுக்குருவி இத்தலத்தில் வந்து இறைவனை வழிப்பட்டதால் ‘சிட்டிலிங்கேஸ்வரர்’ என்றும் வாலி இத்தலத்திற்கு வந்து வழிபட்டதால் ‘வாலிநாதர்’ இவ்விறைவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.