Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், தராசுரம், தராசுரம் - 612702, தஞ்சாவூர் .
Arulmigu Iravadeeswarar Temple, Darasuram, Darasuram - 612702, Thanjavur District [TM014052]
×
Temple History

தல வரலாறு

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு பேரூர் தாராசுரமாகும். குடந்தை நகரத்தையும் இவ்வூரையும் பிரித்து நிற்பது அரிசிலாறே. இவ்வூரில் இந்தியத் தொல்லியத் துறையினர் அமைத்த பரந்த புல்வேளி, அதன் நடுவே தனித்தனி திருமதில்களோடு சுவாமி, அம்மன் கோயில்கள், கிழக்கே திருத்தம் செய்யப்பெற்ற மொட்டைக் கோபுரம் இவைதான் உலகப்புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் ஆகும். இக்கோயிலை எடுப்பித்தவன் சோழப்பேரரசன் இரண்டாம் இராசராசனாவான். கி.பி.1146லிருந்து கி.பி.1163வரை செங்கோலோச்சிய இம்மன்னன் சேக்கிழார் பெருமானையும், ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்ற பேறுடையவன். தன்தந்தை இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் (கி.பி.1133-1150) சேக்கிழார் பெருமானால் இயற்றப்பெற்ற திருத்தொண்டர்புராணம் என்னும் பெரியபுராணத்தின்பால் மிகுந்த ஈடுபாடுற்ற இப்பேரரசன் அந்நூல் கூறும் அடியார்தம் வரலாறு முழுவதையும்...