தாராசுரம் அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் நகருக்குத் தென்மேற்கில் அரிசிலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள ஒரு பேரூர் தாராசுரமாகும். பரந்த புல்வெளி, அதன் நடுவே தனித்தனி திருமதில்களோடு சுவாமி, அம்மன் திருக்கோயில்கள், கிழக்கே திருத்தம் செய்யப்பெற்ற மொட்டைக் கோபுரம் இவைதான் உலகப்புகழ்பெற்ற ஐராவதீசுவரர் கோயில் அமைந்துள்ள இடத்தின் வெளிப் புறத்தோற்றமாகும். யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகமரபுச் சின்னம் என்ற தகுதி அளிக்கப்பெற்றுள்ளது. இந்தியக் கலையியல் வரலாற்றில் தமிழகக் கலைப் படைப்புகளுக்குத் தனிச்சிறப்புண்டு. ஒட்டுமொத்த தமிழகக் கலைப்படைப்புகளின் ஓரே சான்றாக திகழ்வது இத்திருக்கோயில் ஆகும். சோழப் பேரரசின் மன்னன் இராசராசன். கி.பி.1146 முதல் 1163வரை சேக்கிழார் பெருமானையும், ஒட்டக்கூத்தரையும் ஞானாசிரியர்களாகப் பெற்று சிறந்த முறையில் ஆட்சி புரிந்தார். தனது தந்தை...
07:30 AM IST - 12:30 PM IST | |
04:00 PM IST - 08:00 PM IST | |
12:30 PM IST - 04:00 PM IST | |
காலை நடை திறப்பு 7.30 மணி மதியம் நடை சாற்றும் நேரம் 12.30 மணி மாலை நடை திறப்பு 04.00 மணி இரவு நடை சாத்துதல் 08.00 மணி முதல் கால பூஜை காலை 9.00 மணி இரண்டாம் கால பூஜை பகல் 12.00 மணி மூன்றாம் கால பூஜை மாலை 5.00 மணி நான்காம் கால பூஜை இரவு 7.30 மணி |