அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், பெருமகளூர் - 614612, தஞ்சாவூர் .
Arulmigu Somanatha Swamy Temple, Perumagalur - 614612, Thanjavur District [TM014069]
×
Temple History
தல வரலாறு
பேராவூரணி வட்டம் பேராவூரணி - பெருமகளுர் சாலையில் பேராவூரணி நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருவதற்கு திருச்சிராப்பள்ளி நகரில் இருந்தும் அறந்தாங்கி, பேராவூரணியில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.
தலச்சிறப்பு
இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சோமநாத சுவாமி, அம்பாள் அருள்மிகு சுந்தர நாயகி. திருக்கோயில் அருகில் அழகிய திருக்குளம் உள்ளது. திருக்கோயில் அருகில் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி மேற்படி ஆலயத்தில் உபகோயிலாகவும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருகில் உள்ள இதன் உபகோயில் மிகவும் தொன்மையானதும், பழைமையானதும் ஆகும்.
திருக்கோயில் அமைப்பு
இத்திருக்கோயில் அமைந்துள்ள சாலையில் இருபுறம் மரங்களும் வயல்களும் சூழ்ந்து இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. முன் இராஜகோபுரம்...பேராவூரணி வட்டம் பேராவூரணி - பெருமகளுர் சாலையில் பேராவூரணி நகரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. இத்திருக்கோயிலுக்கு வருவதற்கு திருச்சிராப்பள்ளி நகரில் இருந்தும் அறந்தாங்கி, பேராவூரணியில் இருந்தும் பேருந்துகள் உள்ளன.
தலச்சிறப்பு
இத்திருக்கோயிலின் மூலவர் அருள்மிகு சோமநாத சுவாமி, அம்பாள் அருள்மிகு சுந்தர நாயகி. திருக்கோயில் அருகில் அழகிய திருக்குளம் உள்ளது. திருக்கோயில் அருகில் அருள்மிகு சுப்பிரமணிசுவாமி மேற்படி ஆலயத்தில் உபகோயிலாகவும் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருகில் உள்ள இதன் உபகோயில் மிகவும் தொன்மையானதும், பழைமையானதும் ஆகும்.
திருக்கோயில் அமைப்பு
இத்திருக்கோயில் அமைந்துள்ள சாலையில் இருபுறம் மரங்களும் வயல்களும் சூழ்ந்து இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது. முன் இராஜகோபுரம் அழகிய சுதை உருவங்களுடன் கம்பீரமாக காட்சியளித்து நம்மை வரவேற்கிறது.
கோபுர வாயிலை கடந்து சென்றதும் பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. இத்திருக்கோயிலுக்கு இருதிருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் தென்னை மரங்களும், செடிகளும் உள்ளன.
கருவறையில் இறைவன் சுயம்பு லிங்கமாக சோமநாதர் திருநாமம் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். இறைவன் திருமேனி பல வண்ணமாக காட்சி தருகிறது.
மகாமண்டபத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. மகாமண்டபத்தின் அருகில் நவக்கிரகங்கள் விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன.
தினப்பூஜையும் திருவிழாக்களும்
இத்திருக்கோயிலுக்கு காலை, மாலை இரண்டு கால பூஜைகள் நடத்தப்படுகின்றது. வருடாந்திர பெருவிழா பங்குனி உத்திரம், மாதாந்திர ஏறுபடி நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி மற்றும் பிரதோஷ வழிபடு சிறப்பாக நடைபெற்று வருகிறது.