அருள்மிகு ஔஷதபுரீஸ்வரர் திருக்கோயில், மருங்கப்பள்ளம் - 614802, தஞ்சாவூர் .
Arulmigu Oushatha Pureeshwarar Temple, Marungappallam - 614802, Thanjavur District [TM014070]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு ஔஷதபுரீசுவரர் திருக்கோயில்
மருங்கப்பள்ளம்
ஸ்தல வரலாறு
பேராவூரணி நாடியம் வழி பட்டுக்கோட்டை பெருவழிச் சாலையில் பேராவூரணியிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கே 25 கி.மீ தொலைவிலும் மருங்கப்பள்ளம் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்காக 152 அடி நீளமும், தெற்கு வடக்காக 73 அடி அகலமும் கொண்டதாகும். திருமதிற்சுவர்கள் பிரகாரம் உள்பட திருக்கோயில்கள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 11096 சதுர அடி சுமார் 25 செண்டு களாகும்.
இன்றைக்கு சற்றேறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நித்திய-நைவேத்திய படித்தர பூஜை செலவினங்களுக்காக மருங்கப்பள்ளம் கிராமத்தை...அருள்மிகு ஔஷதபுரீசுவரர் திருக்கோயில்
மருங்கப்பள்ளம்
ஸ்தல வரலாறு
பேராவூரணி நாடியம் வழி பட்டுக்கோட்டை பெருவழிச் சாலையில் பேராவூரணியிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கே 25 கி.மீ தொலைவிலும் மருங்கப்பள்ளம் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்காக 152 அடி நீளமும், தெற்கு வடக்காக 73 அடி அகலமும் கொண்டதாகும். திருமதிற்சுவர்கள் பிரகாரம் உள்பட திருக்கோயில்கள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 11096 சதுர அடி சுமார் 25 செண்டு களாகும்.
இன்றைக்கு சற்றேறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நித்திய-நைவேத்திய படித்தர பூஜை செலவினங்களுக்காக மருங்கப்பள்ளம் கிராமத்தை அருள்மிகு ஔஷதப்ரீஸ்வரர் உடனுறையும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்கு இனாமாக வழங்கி மன்னர் மகிழ்ந்தார் என்பது வரலாறு.
வடமொழியில் ஔஷதம் என்பதற்கு தமிழில் மருந்து எனப்பொருள். உயிர்களில் நோய்களைத் தீர்க்கின்ற அருளாளன் ஆகிய இறைவனுக்கு மருந்தீஸ்வரர் எனப்பொருள். ஔஷதபுரீஸ்வரர் என்ற இறைவனின் திருப்பெயராலே மருந்துப்பள்ளம் என அழைக்கப்படுகிறது. அதன் காரணமாக ஔஷதபுரீ என வடமொழியில் இக்கிராமத்திற்கும் ஔஷதப்ரீஸ்வரர், மருந்தீஸ்வரர் என சுவாமிக்கு பெயர்கள் விளங்கியதாக வரலாறு. ஔஷதப்ரீஸ்வரர் தமிழாக்கமே மருந்துப்பள்ளம்.
ஆக மன்னர் அவர்கள் தேசாந்திரம் வந்த போது மனோரா கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு தங்கி இருந்த அந்த காலகட்டத்தில் அவருக்கு இருந்து வந்த நோய் பற்றி சொல்லியிருக்கலாம், அதன் பேரில் மருங்கப்பள்ளம் திருக்கோயில் வளாகப்பகுதிகளில் இருந்து வந்த பச்சிலை மூலிகைகள் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பற்றியும் மன்னர் கேட்டறிந்து மருங்கப்பள்ளம் கிராமத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி, நோய்தீர பச்சிலை மூலிகைகள் உண்டு ஔஷதபுரீஸ்வரரை வழிபட்டதன் பயனாக மன்னருக்கு இருந்து வந்த நோய் தீர்ந்ததாக வரலாறு. காண்டத்தில் குறிப்பிட்டுள்ள முனிவர் சித்த வைத்தியர் ஒருவரும் வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு திருக்குளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள அவரது கற்சிலை விக்கிரகம் இன்றும் சான்று கூறுகிறது.
தீர்த்தம்
இத்திருக்கோயிலின் நுழைவுவாயிலின் எதிரில் சுமார் ஒன்பது ஏக்கர் பரப்பளவில் வெண்தாமரைசெந்தாமரையுடன் கூடிய திருக்குளம் அமைந்துள்ளது. மூன்று படித்துறைகள் உள்ளன. இத்திருக்குளத்தில் நீராடி, எழுந்தருளியுள்ள சுவாமியையும்-அம்மையையும்-சனிபகவானையும் ஏனையமூர்த்திகளையும் வழிபட்டால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
பூஜைகளும் திருவிழாக்களும்
இத்திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை சோமாவாரங்கள், திருக்கார்த்திகை, மார்கழி திருப்பள்ளி எழுச்சி, திருவாதிரை, பொங்கல், மாசிமகம், மகாசிவராத்திரி பெருந்திருவிழாவும் வளர்பிறை தேய்பிறை பிரதோஷங்களும், சங்கடகர சதுர்த்தி விழாவும், வாரவழிபாடு முதலான ஏறுபடி விழாக்கள் திருக்கோயிலாலும், மண்டகப்படிதாரர்களாலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. மாசிமகப் பெருந்திருவிழா, மகாசிவன் ராத்திரி, வருடப்பிறப்பு-வாரவழிபாடு முதலான ஏறுபடி விழாக்கள் திருக்கோயிலாலும், மண்டகப்படிதாரர்களாலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாசிமகத் திருவிழா உத்தராயணம் ஆரம்பித்து தை மாதம் முதல் இப்பகுதிகளில் உள்ள திருக்கோயில்களிலேயே முதன் முதலில் ஆரம்பித்து நடத்தப்படுகின்ற திருவிழா ஆகும். மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி திருக்குளத்தில் நீராடி, சுவாமியையும் அம்மையையும் வழிபட்டு ஏனைய பரிவார மூர்த்திகளையும் வழிபட்டு அருள்மிகு சந்திரசேகரரையும் பெரிய நாயகி அம்மையையும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருக்குள வீதிகளை சுற்றி வாண வேடிக்கைகளுடன் திருஉலா வருவது கண் கொள்ளாக் காட்சியாகும்.