பேராவூரணி நாடியம் வழி பட்டுக்கோட்டை பெருவழிச் சாலையில் பேராவூரணியிலிருந்து கிழக்கே 6 கி.மீ தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கே 25 கி.மீ தொலைவிலும் மருங்கப்பள்ளம் என்ற இடத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்காக 152 அடி நீளமும், தெற்கு வடக்காக 73 அடி அகலமும் கொண்டதாகும். திருமதிற்சுவர்கள் பிரகாரம் உள்பட திருக்கோயில்கள் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு 11096 சதுர அடி சுமார் 25 செண்டு களாகும். இன்றைக்கு சற்றேறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரால் நித்திய-நைவேத்திய படித்தர பூஜை செலவினங்களுக்காக மருங்கப்பள்ளம் கிராமத்தை அருள்மிகு ஔஷதப்ரீஸ்வரர் உடனுறையும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்கு இனாமாக வழங்கி மன்னர் மகிழ்ந்தார்...