Screen Reader Access     A-AA+
அருள்மிகு பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில், Kovilur - 614402, தஞ்சாவூர் .
Arulmigu Brahmmagana Pureeswarar Temple, Kovilur - 614402, Thanjavur District [TM014124]
×
Temple History

புராண பின்புலம்

தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் தஞ்சையில் இருந்து கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் திருவாரூர் புகை வண்டி மார்க்கத்தில் குடிகாடு ரயில் நிலையித்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கில் தஞ்சை நெல்லித்தோப்பு என்னும் இத்தலம் உள்ளது. இந்த ஆலயம் அமைத்தவர் தஞ்சை சூரன் என்னும் கொடியவனை அழித்த தஞ்சை பழங்காலத்து மாமன்னருள் ஒருவராகிய பொருந்தகையார் ஆவார். சூரனை வதம் செய்ததால் மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டுள்ளது. அம்மன்னருக்கு பிரும்மஹத்தி தோஷம் நீங்கி சுய உணர்வு நிலையை அடைய இங்கு இறைவன் அருள்பாலினார்.