தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் தஞ்சையில் இருந்து கிழக்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர் திருவாரூர் புகை வண்டி மார்க்கத்தில் குடிகாடு ரயில் நிலையித்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்கில் தஞ்சை நெல்லித்தோப்பு என்னும் இத்தலம் உள்ளது. இந்த ஆலயம் அமைத்தவர் தஞ்சை சூரன் என்னும் கொடியவனை அழித்த தஞ்சை பழங்காலத்து மாமன்னருள் ஒருவராகிய பொருந்தகையார் ஆவார். சூரனை வதம் செய்ததால் மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டுள்ளது. அம்மன்னருக்கு பிரும்மஹத்தி தோஷம் நீங்கி சுய உணர்வு நிலையை அடைய இங்கு இறைவன் அருள்பாலினார். திருக்குளம் வெண்கமல புஷ்கரணி அம்மன் குளம் உள்ளது. பெயர் பிரும்மஹத்தி என்னும் அஞ்ஞானத்தை மாமன்னருக்கு போக்கி ஞானம் என்னும் சுய அறிவை அளித்த பரமனானதால் இந்த...