அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், திங்களூர் - 613204, தஞ்சாவூர் .
Arulmigu Kailasanathaswamy Temple, Thingalur - 613204, Thanjavur District [TM014150]
×
Temple History
தல வரலாறு
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போராட்டம். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளி வரும் அமிர்தத்தை யார் எடுத்துக் கொள்வதென்று? பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக அமைந்தது மந்தாரமலை. கடலைக் கடையும் கயிறாக விளங்கியது வாசுகி என்னும் பாம்பு. பாம்பின் வாய்ப்புறத்தை அசுரர்கள் பிடித்துக் கொண்டார்கள். வால் பக்கத்தை தேவர்கள் பிடித்துக் கொண்டார்கள். இங்ஙனம் வாசுகியைப் பிடித்தவாறு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். கயிறாக மாறிய வாசுகி அசுரர்களாலும், தேவர்களாலும் இழைக்கப்படும் அவஸ்தையில் தன் வாயினின்றும் ஆலகால விஷத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைக் பெறவிரும்பிய தேவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது கொடிய நஞ்சேயாகும். விஷத்தின் தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் சுட்டுப் பொசுக்க ஆரம்பித்தது.
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை...தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போராட்டம். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வெளி வரும் அமிர்தத்தை யார் எடுத்துக் கொள்வதென்று? பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக அமைந்தது மந்தாரமலை. கடலைக் கடையும் கயிறாக விளங்கியது வாசுகி என்னும் பாம்பு. பாம்பின் வாய்ப்புறத்தை அசுரர்கள் பிடித்துக் கொண்டார்கள். வால் பக்கத்தை தேவர்கள் பிடித்துக் கொண்டார்கள். இங்ஙனம் வாசுகியைப் பிடித்தவாறு பாற்கடலைக் கடைய ஆரம்பித்தார்கள். கயிறாக மாறிய வாசுகி அசுரர்களாலும், தேவர்களாலும் இழைக்கப்படும் அவஸ்தையில் தன் வாயினின்றும் ஆலகால விஷத்தைக் கக்க ஆரம்பிக்கிறது. பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தைக் பெறவிரும்பிய தேவர்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்தது கொடிய நஞ்சேயாகும். விஷத்தின் தீவிரம் வெப்பமாக மாறி தேவர்களையும், அசுரர்களையும் சுட்டுப் பொசுக்க ஆரம்பித்தது.
தேவர்கள் அஞ்சி பதற்றமுடன் எல்லாம் வல்ல இறைவனை - சிவபெருமானை தஞ்சம் அடைகிறார்கள். தஞ்சம் அடைந்தவர்களைக் காக்கும் தயாபரனான சர்வ வல்லமைப் படைத்த சிவன், தேவர்களுக்கு அபயம் அளிக்க வேண்டி தனது சீடர் ஆலாலசுந்தரர் மூலம் அவ்விஷத்தைப் பெற்றுப் பருகுகிறார். இச்செயலினைக் கண்ட தேவர்கள் மன மகிழ்ந்தாலும் ஆலகால விஷ வெப்பத்தின் தாக்குதலால் மயக்கமடைந்திருந்தார்கள். பாற்கடலைக் கடைந்தபோது பல பொருள்கள் அதிலிருந்து வெளிவந்தன. அவ்வாறு தோன்றிய பொருள்களில் ஒன்றுதான் சந்திரன். அவ்வாறு தோன்றிய சந்திரன் தேவர்களின் மயக்கத்தை தனது அமிர்த கலைகளால் மாற்றி அவர்களை மெய் குளிர வைத்தான்.
தட்சன், தனது 27 மகள்களையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துவதாக வாக்களித்த சந்திரன், சொன்னபடி நடக்காமல் ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் பிரியமாக இருக்கிறார். இதனால் மனம் வருந்திய மற்றவர்கள், தங்களின் தந்தையான தட்சனிடம் முறையிடுகின்றனர். தன் பெண்களிடம் பாரபட்சம் காட்டி, அவர்களை மனம் வருந்த செய்த சந்திரன் மீது கோபம் கொண்ட தட்சன், சந்திரனின் கலைகள் பதினான்கும் தினம் ஒன்றாகத் தேய்ந்து போகும்படி சாபம் கொடுக்கிறான். தினம் ஒன்றாகக் கலைகளை இழந்த சந்திரன், பதறிப் போய், தட்சனிடமே இந்த சாபம் தீர வழி கேட்கிறார்.
சிவபெருமானை நோக்கி தவம் செய் என அவர் கூற, இந்தத் சந்திரன் தலத்திற்கு வந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்கிறார் சந்திர பகவான். சந்திரன் முழுவதுமாக தனது பொலிவை எல்லாம் இழந்து நிற்கும் வேளையில் அவருக்குக் காட்சி தந்த சிவ பெருமான், தேய்ந்த நிலையில் பிறையாக இருந்த சந்திரனை தனது முடியில் சூடி, சந்திர மெளலீஸ்வரராக காட்சி தருகிறார். அதோடு, தட்சனின் சாபத்தை முழுவதுமாக நீக்க முடியாது. அதனால் அவரின் சாபத்தின்படி 15 நாட்கள் தேய்ந்தும், பிறகு தனது அருளால் 15 நாட்கள் வளரும் செய்வாய் என வரமளித்தார். சந்திரன் தவம் செய்து பலனடைந்த தலம் என்பதால் அவரின் பெயராலேயே இது திங்களூர் ஆயிற்று.