தல வரலாறு
திருவாரூர் தஞ்சை சாலையில் அமைந்துள்ள ஊர் திருவிலமல். திருவாரூரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஓடம்போக்கி ஆற்றின் தென்கரையில் நின்றிலங்கும் இத்திருக்கோயில் அருள்மிகு பதஞ்சலி மனோகரர் ஆலயமாகும். இங்கு எழுந்தருளிய இறைவன் அருள்மிகு பதஞ்சலி மனோகரர் எனவும் இறைவி அருள்மிகு மதுபாஷிணி எனவும் அழைக்கப்படுகிறார். கிழக்கு நோக்கிய இத்திருக்கோயிலின் எதிரே அக்கினி தீர்த்தம் அமைந்துள்ளது.