Arulmigu Mahamariamman Temple, Valangaiman - 612804, Thiruvarur District [TM014280]
×
Temple History
தல வரலாறு
கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை ஓரத்திலேயே திருக்கோயில் அமைந்துள்ளது.
கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவோர், எனக்கு உயிர்பிச்சை கொடு என்று தன் உயிர் பிழைக்க வைத்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக, குணம் அடைந்ததும் பாடைக்கட்டி அதில் பிணம் போல படுத்துக் கிடந்து, கோயிலை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் இங்கு உள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, வலங்கைமானுக்கு அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் அருகில், ஒரு பெண் குழந்தை கேட்பாரின்றி இருக்க, அதன்மீது பரிவு கொண்ட ஒரு பெண் அதனை எடுத்துச் சென்று சீதளா என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். அந்தக் குழந்தை சிலகாலம் கழித்து வைசூரி நோய்கண்டு மரித்தது.
அதே நள்ளிரவு, ஊர்...கும்பகோணம் - மன்னார்குடி சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை ஓரத்திலேயே திருக்கோயில் அமைந்துள்ளது.
கடும் நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறுவோர், எனக்கு உயிர்பிச்சை கொடு என்று தன் உயிர் பிழைக்க வைத்த தெய்வத்திற்கு நேர்த்திக் கடனாக, குணம் அடைந்ததும் பாடைக்கட்டி அதில் பிணம் போல படுத்துக் கிடந்து, கோயிலை வலம் வந்து பிரார்த்தனையை நிறைவேற்றும் வழக்கம் இங்கு உள்ளது.
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு, வலங்கைமானுக்கு அருகில் உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் அருகில், ஒரு பெண் குழந்தை கேட்பாரின்றி இருக்க, அதன்மீது பரிவு கொண்ட ஒரு பெண் அதனை எடுத்துச் சென்று சீதளா என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள். அந்தக் குழந்தை சிலகாலம் கழித்து வைசூரி நோய்கண்டு மரித்தது.
அதே நள்ளிரவு, ஊர் மக்களின் கனவில் வந்த சீதளா எனக்கு உடல்தான் இல்லை, உயிர் உள்ளது. உங்களை வெப்ப நோயிலிருந்து காத்திடவே நான் குழந்தை வடிவில் வந்தேன். என்னை வழிபடுவோரை என்றும் காத்திடவேன் என்று அருளியது.
அதனைக் கேட்ட மக்கள் இறந்த குழந்தையை அடக்கம் செய்த இடத்திலே ஒரு கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். அந்த அம்மனே சீதளாதேவி மகாமாரியம்மனாக காட்சி தருகிறாள். சீதளா என்றால் குளிர்ச்சி என்று பொருள். வெப்பத்தின் கொடுமையிலிருந்து காப்பவளே சீதளாதேவி என அழைக்கப்படுகிறாள்.
நான்கு கரங்களுடன் வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வீர சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கோலம், வலது மேற்கரத்தில் உடுக்கையும், வலது கீழ்கரத்தில் கத்தியும், இடது மேற்கரத்தில் சூலமும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் ஏந்தியுள்ளாள். அம்மனின் இருதோள்களிலும் இரு நாகங்கள் உள்ளன.
பாடைக்காவடி எடுப்போர் குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு, பாடையில் படுத்தபடி, தாடையைக் கட்டியபடி கால் கட்டைவிரல்கள் கட்டியபடி, பிணம் போல, நான்கு பேர் தூக்கிவர திருக்கோயிலை மூன்று முறை வலம் வருவர். அதன்பின் பூசாரி, அம்மனின் அபிஷேக நீரை பாடையில் படுத்திருப்பவர் மீது தெளித்து, திருநீறு பூசி அவரை எழுப்புவார். பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிறு அன்று இங்கு வந்து சேரும் பாடைக்காவடிகள் ஏராளம்.