திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பிரார்த்தனை தலமாக விளங்கி வருகிறது . இத்திருக்கோயிலில் பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகும் . இத்திருக்கோயிலில் வருடாவருடம் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா நடைபெற்று வருகிறது . பக்தர்கள் தங்கள் உயிர் போகும் தருவாயில் ஸ்ரீ அம்பாளை வேண்டி அம்மனுக்கு பாடைக்காவடி எடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள் , தங்கள் உடல் நலமடைந்தவுடன் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள் ஒருவர் இறந்தால் எப்படி பாடையில் படுக்க வைத்து எடுத்துச் செல்வார்களோ அதேபோல் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பாடையில் படுத்து உறவினர்களுடன் திருக்கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து...