திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் 3கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் இருக்கிறது.பாண்டியனுடைய கரடி வடிவம் நீங்கிய இடம். அப்பர் திருநாவுக்கர் பாடிய தலம். திருச்சேறை என்னும் தலத்திற்கு தென்மேற்கிலும், திருவிடைமருதூர் என்னும் மத்தியார்ச்சுனத் தலத்திற்கு தெற்கிலும், ஆலங்குடி என்னும் தலத்திற்கு வடக்கிலும்உள்ளது. இத்தலம் திருக்கடுவாய்கரைப்புத்தூர் என அழைக்கப்படுகிறது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ருது பரிகார தலமாக விளங்கி வருகிறது. பெண்கள் பருவ வயது வந்தும் ருது ஆகாதவர்கள் இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு சொர்ணாம்பிகையை பிரதி வாரம் திங்கட்கிழமையில் 7 மஞ்சள்...திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் 3கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் இருக்கிறது.பாண்டியனுடைய கரடி வடிவம் நீங்கிய இடம். அப்பர் திருநாவுக்கர் பாடிய தலம். திருச்சேறை என்னும் தலத்திற்கு தென்மேற்கிலும், திருவிடைமருதூர் என்னும் மத்தியார்ச்சுனத் தலத்திற்கு தெற்கிலும், ஆலங்குடி என்னும் தலத்திற்கு வடக்கிலும்உள்ளது. இத்தலம் திருக்கடுவாய்கரைப்புத்தூர் என அழைக்கப்படுகிறது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ருது பரிகார தலமாக விளங்கி வருகிறது. பெண்கள் பருவ வயது வந்தும் ருது ஆகாதவர்கள் இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு சொர்ணாம்பிகையை பிரதி வாரம் திங்கட்கிழமையில் 7 மஞ்சள் கிழங்கு 7 எலுமிச்சம்பழம், வைத்து 7 தீபம் ஏற்றி 7 முறை வலம் வந்து வழிபட்டு இங்கு வந்து தரிசனம் செய்வதன் மூலம் நிவர்த்தி ஆவது சிறப்பாகும். இவ்வாறு பல பெண்கள் அம்மனை வழிபட்டு பெறு பெற்றார்கள்.
இத்திருக்கோயில் சமயக் குரவர் அப்பர் பெருமானால் பாடல் பெற்ற தலமாகும் சுமார் 1500 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த திருத்தலம். மூர்த்தி, தலம், திரிசூல தீர்த்தம் மூன்றாலும் சிறப்பு மிக்க தலமாகும்.
இத்தலம் சித்திரை மாதம் 11,12,13 ஆகிய நாட்களில் சுவாமி மேல் சூரியஒளி பட்டு சூரியபூஜை நடைபெறும். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
அப்பர் பெருமான் ஐந்தாம் திருமுறையில் ஒன்றாம் பதிகம் பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலிலும் திருக்கடுவாய் தென்புத்தூர் என்று பாடியுள்ளார். இத்திருக்கோயிலில் ஐந்து நிலை இராஜகோபுரம் உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இத்தலத்திற்கு நகர பேருந்து வசதி உள்ளது. கும்பகோணம் இரயில் நிலையத்தில் இருந்து இறங்கி பெருந்து மூலம் இத்தலத்தை வந்து அடையலாம். இத்திருக்கோயில் அலுவலகம் வலங்கைமான் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில் அலுவலகத்தில் அமைந்துள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்,
ஆண்டாங்கோயில்.
இருப்பு (அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான்)
04374-264575