திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் 3கி.மீ. தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வலங்கைமான் வழியாகத் திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் இருக்கிறது.பாண்டியனுடைய கரடி வடிவம் நீங்கிய இடம். அப்பர் திருநாவுக்கர் பாடிய தலம். திருச்சேறை என்னும் தலத்திற்கு தென்மேற்கிலும், திருவிடைமருதூர் என்னும் மத்தியார்ச்சுனத் தலத்திற்கு தெற்கிலும், ஆலங்குடி என்னும் தலத்திற்கு வடக்கிலும்உள்ளது. இத்தலம் திருக்கடுவாய்கரைப்புத்தூர் என அழைக்கப்படுகிறது திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆண்டாங்கோயில் அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் ருது பரிகார தலமாக விளங்கி வருகிறது. பெண்கள் பருவ வயது வந்தும் ருது ஆகாதவர்கள் இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் அருள்மிகு சொர்ணாம்பிகையை பிரதி வாரம் திங்கட்கிழமையில் 7 மஞ்சள்...