ஒரு காலத்தில் கார்த்திகார்ச்சுனன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். அவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டான். அவன் கோரிய வரங்கள் பலவும் அவனுக்குப் பெருமாள் தந்தருளவே, கற்பகலிங்கம் என்ற பெயரால் பிரதிட்டை செய்து திருக்கோயிலும் அமைத்துப் பரவினான் என்று தலமான்மியம் பேசும். பதங்க முனிவர் வழிபட்டு வசித்த திருவிடம் ஆகும் இது. தேவதருவாகிய கற்பகம் கேட்டவர்க்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் திறம் வாய்ந்தது. அதனை படைத்த பெருமானாகிய நம் சிவபெருமான் கற்பகநாதராக இத்திருத்தலத்தில் எழுந்தருளித் தம்மை வழிபடுவோர்க்கு இம்மை மறுமை இன்பங்களை வழங்கி அருளுவதில் வியப்பேது. கார்த்திகார்ச்சுனன் வழிபட்டு வரமெலாம் பெற்றுய்ந்த இத்தலத்தை அகத்தியர் வழிபட்டதாக தலமான்மியம் கூறும். இத்தலத்து...ஒரு காலத்தில் கார்த்திகார்ச்சுனன் என்ற அசுரன் ஒருவன் இருந்தான். அவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டான். அவன் கோரிய வரங்கள் பலவும் அவனுக்குப் பெருமாள் தந்தருளவே, கற்பகலிங்கம் என்ற பெயரால் பிரதிட்டை செய்து திருக்கோயிலும் அமைத்துப் பரவினான் என்று தலமான்மியம் பேசும். பதங்க முனிவர் வழிபட்டு வசித்த திருவிடம் ஆகும் இது. தேவதருவாகிய கற்பகம் கேட்டவர்க்குக் கேட்டதை எல்லாம் கொடுக்கும் திறம் வாய்ந்தது. அதனை படைத்த பெருமானாகிய நம் சிவபெருமான் கற்பகநாதராக இத்திருத்தலத்தில் எழுந்தருளித் தம்மை வழிபடுவோர்க்கு இம்மை மறுமை இன்பங்களை வழங்கி அருளுவதில் வியப்பேது. கார்த்திகார்ச்சுனன் வழிபட்டு வரமெலாம் பெற்றுய்ந்த இத்தலத்தை அகத்தியர் வழிபட்டதாக தலமான்மியம் கூறும். இத்தலத்து இறைவர் திருநாமம் கற்பகநாதர் என வழங்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய கற்பகநாதர் கோயிலில் இறைவி அருள்மிகு பாலசுந்தரி அம்பாள் தெற்கு நோக்கி அமையப்பெற்று அருள்பாளிக்கின்றார். திருத்துறைப்பூண்டியிலிருந்து 17 கி. மீ தொலைவில் தென்மேற்கு திசையில் இத்தலம் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர் இத்தலத்தில் வழிபட்டு பதிகம் பாடி அருள்பெற்றார். திருக்கோயிலின் தலவிருட்சம் பலா மரமாகும்.