Arulmigu Agneeswarar Temple, Thirukkollikadu - 610205, Thiruvarur District [TM014321]
×
Temple History
தல வரலாறு
சுவாமி .கொள்ளிக்காடர் அக்னீஸ்வரா்
அம்மன் பெயர் . பஞ்சனும் மெல்லடியால் மிருதுபாதநாயகி
ஸ்தல விருட்சம் வன்னி மரம் அக்னிமரம்
தீர்த்தம் . ...சுவாமி .கொள்ளிக்காடர் அக்னீஸ்வரா்
அம்மன் பெயர் . பஞ்சனும் மெல்லடியால் மிருதுபாதநாயகி
ஸ்தல விருட்சம் வன்னி மரம் அக்னிமரம்
தீர்த்தம் . அக்னீதீர்தக்
இத்திருதலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கொள்ளிக்காடரை திருஞானசம்பந்தர் தேவாரத்தில் ஓங்கு புகழ் கொள்ளிக்காடரே என்றும் , இத்தலத்தில் தரிசித்தால் எல்லா புகழும் ஒருவருக்கு ஓங்கும் , என்றும் கூறியுள்ளார்.சோழமன்னன் ஒருவருக்கு மிகக் கடமையான சனிதோஷம் ஏற்படவே, எங்கும் அவனுக்கு அமைதி கிட்டாமையால் கடைசியாக திருக்கொள்ளிக்காட்டின் பெருமை அறிந்து , இங்கு வந்து சனி பகவானை பூசித்து அக்னீஸ்வரர், மிருதுபாதநாயகி ஆகயோர் திருவடிகளை வணங்கியபோது சனிதோஷம் முழுவதும் நீங்கி மனமகிழ்வு பெற்றார். என்று தல புரணாம் கூறுகிறது.
மகலெட்சுமி சன்னதியும் , சனிபகவான் சன்னதியும் , தனித்தனி சன்னதியாக அருகருகே உள்ளது.பொங்கு சன்னதியாக அருகருகே உள்ளது.பொங்கு சனிபகவானுக்கு நேரெதிரே பைரவர் சன்னதியும் நவகிரக சன்னதியும் அமைந்துள்ளது. நவகிரங்கள் ஒன்றை ஒன்று பார்க்காமல் அமைதிருப்பது பொதுவான அம்சமாகும். இத்திருத்தலத்தில் நவகிரங்கள் ப வடிவில் அமைந்துள்ள சிறப்பு அம்சமாகும்.
சனிபகவான் சிவபூஜைசெய்து ஈஸ்வரபட்டம், வாங்கிய ஊர் . சாரணமான எல்லா ஊரிலுமுள்ள சனி பகவானுக்கு கையில் சூலம் , வில் , அம்பு ( ஆயுதங்களாக ) இருக்கும். அவர் தண்டைகொடுக்கும் மூர் த்தி ஆவார். மனிதன் தான் செய்த பாவம் அனைத்தையும் ஏழரை ஆண்டு சனிதோஷம் வரும்பொழுது அவனை தண்டனை அனுபவிக்கசெய்து புண்ணியவனாக்குவதுபொங்கு சனீஸ்வரபகவானின் வேலை.இவ்வூரில் பொங்கு சனிபகவான் சிவ பூஜை செய்து ஈஸ்வரபட்டம்பெற்று வாழ்த்தும் கடவுள் , அருள்பாலிக்கும் கடவுடாக வரம் பெற்றார். அதாவது மகலெட்சுமி ஸ்தனத்தில் அமர்ந்து வலமேல் கரத்தில் ஏர் கலப்பை , வல கீழ்கரம் ஊர் ஹஸ்தமாகவும் காக்கையை வாகனமாகவும் கிழக்குநோக்கியும் நின்ற திருமேனியாகவும் அருள்பாலிக்கிறார்