Arulmigu Sadhurangavallabhanatha Swamy Temple, Poovanur - 612803, Thiruvarur District [TM014324]
×
Temple History
தல பெருமை
வெகு காலத்திற்கு முன் சிவபெருமான் உமாதேவியோடு திருக்கைலாய மலையில் வீற்றிருக்கும் பொழுது சமுத்திரம் பெருகி பூமியில் அநேக இடங்கள் அழிந்து மீளவும் உண்டானபோது சிவபெருமான் உமையம்மையோடு வான் வழியே உலகை சுற்றி பார்த்து வரும்போது இத்திருத்தலத்திற்கு அருகில் வரும்போது புதிய நறுமணம் வீசக்கண்ட இறைவன், உமையம்மையோடு இங்கு தாங்கினார். உடன் வந்த சிவகணங்களும், தேவர்களும் இறைவனை பூசிக்க விரும்பி வேண்டினர். இறைவனும் இசைந்து இத்தலத்தில் லிங்கத் திருமேனி அமைத்து பூசியுங்கள், யாம் உமக்கு அருள்புரிவோம் என்றார். அவ்வாறே கடம்பவனமாய் இருந்த இத்திருத்தலத்தில் சிவலிங்கத் திருமேனி அமைத்து பூசித்தனர்.
சிவபெருமானும் மகிழ்ந்து அருள்பாலித்து யாமே விரும்பி உறையும் தலமாய் விளங்குவதால்...வெகு காலத்திற்கு முன் சிவபெருமான் உமாதேவியோடு திருக்கைலாய மலையில் வீற்றிருக்கும் பொழுது சமுத்திரம் பெருகி பூமியில் அநேக இடங்கள் அழிந்து மீளவும் உண்டானபோது சிவபெருமான் உமையம்மையோடு வான் வழியே உலகை சுற்றி பார்த்து வரும்போது இத்திருத்தலத்திற்கு அருகில் வரும்போது புதிய நறுமணம் வீசக்கண்ட இறைவன், உமையம்மையோடு இங்கு தாங்கினார். உடன் வந்த சிவகணங்களும், தேவர்களும் இறைவனை பூசிக்க விரும்பி வேண்டினர். இறைவனும் இசைந்து இத்தலத்தில் லிங்கத் திருமேனி அமைத்து பூசியுங்கள், யாம் உமக்கு அருள்புரிவோம் என்றார். அவ்வாறே கடம்பவனமாய் இருந்த இத்திருத்தலத்தில் சிவலிங்கத் திருமேனி அமைத்து பூசித்தனர்.
சிவபெருமானும் மகிழ்ந்து அருள்பாலித்து யாமே விரும்பி உறையும் தலமாய் விளங்குவதால் இத்தலம் எல்லாத் தளங்களிலும் மேம்பட்டு விளங்கும். இத்தலத்தை நினைப்பவர், வழிபடுபவர் யாவர்க்கும் எல்லா நன்மைகளும் உண்டாகுமென்றும் கூறியருளினார். பூக்கள் நிரம்பிய இத்தலத்தில் சிவபிரான் கோயில் கொண்டமையால் இவ்வூர் திருப்பூவனூர், புஷ்பவனம் என்று பெயர் பெற்றது. இறைவனும் பூவனூர் புனிதன், பூவனூர் உடையார், புஷ்பவனநாதர் என்ற திருப்பெயர்களை பெற்று அருள்பாலித்து வருகிறார்.