Screen Reader Access     A-AA+
அருள்மிகு முல்லைவனேஸ்வரர் திருக்கோயில், முல்லைவாசல் - 614404, தி௫வாரூர் .
Arulmigu Mullaivaneswarar Temple, Mullaivasal - 614404, Thiruvarur District [TM014325]
×
Temple History

தல பெருமை

நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம் காவிரி நதியின் இணை நதியாய் விளங்கும் கோரையாற்றின் வடகரையில் கழனிசூழ்ந்த முல்லைவாசல் என்னும் அழகிய கிராமத்தில் அருளே உருவாய் அமர்ந்து அருள் பாலிக்கும் அருள்மிகு கற்பகவல்லி சமேத முல்லைவனேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. மூர்க்களத்தில் ஸ்ரீ மஹா விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து ஹிரண்ய சம்ஹாரம் செய்த பிறகு இரத்த வெறி பிடித்து அலைந்த பொழுது சிவபெருமான் சரபரூபம் எடுத்தும், பிரகலாதன் தனது பக்தியாலும் கோபத்தை தணித்தனர். இருந்தபோதும் பிரம்மஹத்தி தோஷம் என்னும் சாபம் பகவானை பற்றிக்கொண்டு முகமும் உடம்பும் கோரரூபமாய் மாறியது. அது நீங்க சிவபெருமானை பெருமாள் தியானித்து வேண்ட, சிவனும் தோஷம் விலக, இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுவதும் பூஜை...