Screen Reader Access     A-AA+
அருள்மிகு பவஔஷதீஸ்வரர் திருக்கோயில், திருத்துறைப்பூண்டி - 614713, தி௫வாரூர் .
Arulmigu Bavaoushadeeswarar Temple, Thiruthuraipoondi - 614713, Thiruvarur District [TM014329]
×
Temple History

தல பெருமை

இத்தலம் மூர்த்தி, தலம் , தீர்த்தம் என்ற மூன்றினாலும் சிறப்புற்று விளங்குகிறது. தவம் சிறக்கத் தகுந்த தலம் திருத்துறைப்பூண்டி எனத்தேர்ந்து அகத்தியர், வாமதேவர், காசிபர், அத்திரி, பரத்துவாசர், கௌதமர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, வசிட்டர், முதலான ஒன்பான முனிவர்கள் இங்கு வந்து ஒவ்வொருவரும் தனித்தனி தீர்த்தம் உண்டாக்கி சிவலிங்கப்பிரதிஷ்டை செய்து சாயுச்சிய பதவி வேண்டி ஆயிரம் ஆண்டுகள் உருத்திர பாசுபதம் எனும் யாகம் செய்தனர். ப்ரம்மா ரஜோ குணத்தால் செய்த பாவம் நீக்க இத்தலம் வந்து சுயம்பு லிங்கமும் அம்பாளையும் பிரதிஷ்டை செய்து ப்ரம்ம தீர்த்தம் மற்றும் சுமங்கலி தீர்த்தம் ஆகியவற்றை படைத்தது ஆறு கால பூஜை செய்து வணங்கி வந்தார். நித்திய வழிபாட்டையும், சித்திரை திருவிழாவையும் சிறப்புற நடத்த செய்து தன்னுலகம்...

புராண பின்புலம்

தல தோற்றம் : ப்ரம்மா தம்முடைய ஆக்கல் தொழிலே பெரிதென்றார் . சரஸ்வதி தாம் மட்கட்களிலுக்கும் அறிவே பெரிதென்றார் . பிரகஸ்பதி முனிவர் சரஸ்வதி பெரியவள் என்றார் . ப்ரம்மா ராஜோ குணத்தினால் மயங்கி வாதிட்டமைக்கு வருந்தி அக்குணத்தை நீக்க வில்வாரணியம் வந்து ப்ரம்ம தீர்த்தத்தை உண்டாக்கி தவம் செய்தார் . அவர் தவத்திற்கிரங்கி சிவபெருமான் வில்வமரத்தடியில் சுயம்புமூர்த்தியாய் தோன்றி ராஜோ குணத்தை நீக்கி வரன்கள் தந்து அருளினார் . இதனால் இத்தலம் பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்பெறும் நிலை...