Arulmigu Nellivananathaswamy Temple, Thirunellikaval - 610205, Thiruvarur District [TM014378]
×
Temple History
தல பெருமை
திருத்தலத்தின் பெயர்
இக்கோயிலின் பெயர் தேவாரப் பாடலின் படி திருநெல்லிக்கா என்பது. பிற்காலத்தில் திருநெல்லிக்காவல் என வழங்குகிறது. வடமொழிப்பெயர் ஆமலகவனம் என்பது. தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலிய 5 மரங்களும் இவ்விடத்தில் நெல்லி மரங்களாக அமைந்தமையால் இப்பெயர்கள் ஏற்பட்டது. மேலும் இத் தலத்திற்கு அருணநகரம், சகியாமலபுரம், பிரம்ம தீர்த்தபுரம்,குட்டரோககரம், மங்களபுரம், சர்வோத்தமபுரம்,பஞ்சதீர்த்தபுரம்,ஆனந்தபுரம்,அமிர்தானந்தபஞ்சாட்சரமூர்த்திபுரம்,பஞ்சகூடபுரம்,அமிர்தவித்யாபுரம் முதலிய பெயர்களும் வழங்கும், இவை அனைத்தும் புராணத்தில் சொல்லப்பட்டவை.
சூரியன் வழிபட்டதால் அருணநகரம் என்றும் பிரம்மதீர்த்தத்தை கொண்டிருப்பதால் பிரம்ம தீர்த்தபுரம் என்றும் திவ்யரூபன் என்ற கந்தர்வனுக்குண்டான குட்ட நோய் நீங்கப்பெற்றதால் குட்டரோககரம் என்றும், திருவாரூர்,சிதம்பரம் முதலிய தலங்களுக்கு சென்று வழிபடும் பயன்கள் இத்தலத்தில் எளிதில் கிடைப்பதால் சர்வோத்தமபுரம் என்றும் இன்பம் தருவதால் ஆனந்தபுரம் என்றும், பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்துகளும் இறைவனைப் பூசிப்பதால் பஞ்சாட்சரபுரம் என்றும்...திருத்தலத்தின் பெயர்
இக்கோயிலின் பெயர் தேவாரப் பாடலின் படி திருநெல்லிக்கா என்பது. பிற்காலத்தில் திருநெல்லிக்காவல் என வழங்குகிறது. வடமொழிப்பெயர் ஆமலகவனம் என்பது. தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலிய 5 மரங்களும் இவ்விடத்தில் நெல்லி மரங்களாக அமைந்தமையால் இப்பெயர்கள் ஏற்பட்டது. மேலும் இத் தலத்திற்கு அருணநகரம், சகியாமலபுரம், பிரம்ம தீர்த்தபுரம்,குட்டரோககரம், மங்களபுரம், சர்வோத்தமபுரம்,பஞ்சதீர்த்தபுரம்,ஆனந்தபுரம்,அமிர்தானந்தபஞ்சாட்சரமூர்த்திபுரம்,பஞ்சகூடபுரம்,அமிர்தவித்யாபுரம் முதலிய பெயர்களும் வழங்கும், இவை அனைத்தும் புராணத்தில் சொல்லப்பட்டவை.
சூரியன் வழிபட்டதால் அருணநகரம் என்றும் பிரம்மதீர்த்தத்தை கொண்டிருப்பதால் பிரம்ம தீர்த்தபுரம் என்றும் திவ்யரூபன் என்ற கந்தர்வனுக்குண்டான குட்ட நோய் நீங்கப்பெற்றதால் குட்டரோககரம் என்றும், திருவாரூர்,சிதம்பரம் முதலிய தலங்களுக்கு சென்று வழிபடும் பயன்கள் இத்தலத்தில் எளிதில் கிடைப்பதால் சர்வோத்தமபுரம் என்றும் இன்பம் தருவதால் ஆனந்தபுரம் என்றும், பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்துகளும் இறைவனைப் பூசிப்பதால் பஞ்சாட்சரபுரம் என்றும் ஜந்து தீர்த்தங்களையுடையதால் பஞ்சதீர்த்தபுரம் என்றும் ஐந்து தீர்த்தங்களையுடையதால் பஞ்சதீர்த்தபுரம் என்றும் ஐந்து ஊர்களை கொண்டிருப்பதால் பஞ்சகூடபுரம் என்றும் பெருமானருளால் அமுதல் கிடைக்கப்பெற்றதால் அமிர்தவித்யாபுரம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
கோயிலின் அமைப்பு
கோயில் மேற்கு நோக்கியது. முன்புள்ள சுமார் 80 அடி உயரம் கொண்ட இராஐகோபுரம் 5 நிலைகளையும் 5 கலசங்களையும் கொண்டது. இராஐகோபுரத்திற்கு வெளியே மண்டபநந்தியும், கொடிமரமும் உள்ளன. கோயிலுக்குள் ஒரு பிரகாரமும் வெளியில் இரண்டு பிரகாரங்களும் உள்ளன. இரண்டாம் பிரகாரத்தில் மூன்று பக்கங்களிலும் கோயில் நந்தவனம் உள்ளது. உட் பிரகாரத்தில் மேற்கில் விநாயகர், முருகன்,சனீஸ்வரன்,மகாலெட்சுமி சந்நதி, வடபுறத்தில் நெல்லிமரத்தடியில் நெல்லிவனநாதரும்,கீழ் புறத்தில் யாகசாலை,பைவரர்,நவக்கிரகம், சூரியன் மற்றும் கட்டும் மண்டபம் ஆகியவை உள்ளன. அதற்கு அடுத்து மடைப்பள்ளியும் இரண்டு கிணறுகளும் உள்ளன. அம்மன் சன்னதி எதிர்புறத்தில் 12 தூன்களை கொண்ட கருங்கல் மண்டபம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது இதன் நேர்முகத்தில் பிரம்ம தீர்த்த குளம் உள்ளது.
இத்தலத்து இறைவனை வழிபட்டோர்
இத் தலத்து பிரம்மன், திருமால், சூரியன், சந்திரன்,சனி,கந்தர்வர், துர்வாசர், சுசன்மா முதலியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள். மன்னர்களில் ஆமலகேசசோழன், உத்தமசோழன், இராஐஇராஐன்,இராஐந்திரன் முதலிய மன்னர்கள் வழிபட்டு நற்கதியடைந்துள்ளார்கள். சைவ சமய சமயாச்சாரியார்களாகிய திருஞானசம்பந்தர்,அப்பர், சுந்தரர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு பதிகம் பாடியுள்ளார்கள்.
தினப்பூஜையும், திருவிழாக்களும்
இத் தலத்தில் உறையும் பெருமானுக்கும் பிற மூர்த்திகளுக்கும் தினந்தோறும் ஆறு காலங்களிலும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமாகிய பெருவிழா நடைபெறும். அப்போது தெப்ப விழாவும் தேரோட்டமும் நடைபெறும். 10 நாட்கள் வரையில் சுவாமி பல வாகனங்களில் புறப்பட்டு வீதிவலம் வரும். 10 ம் நாள் மிருகசீரிட நட்சத்திரத்தன்று தேரோட்டம் நிகழும். ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் மங்களநாயகியின் திருக்கல்யாண விழாவும் நடைபெறும்.புரட்டாசியில் நவராத்திரியும், ஐப்பசியில் கந்த சஷ்டி உற்சவம் ஆறு நாட்கள் வரை நடைபெறும். அடுத்த நாள் வள்ளி தெய்வானை திருமணம் நடைபெறும். கார்த்திகை வாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். கடைஞாயிறு அன்று சூரிய தீர்த்தத்தில் பெருமான் காட்சி கொடுப்பார். மார்கழியில் திருவாதிரை நாளில் நடராஐர் புறப்பட்டு தரிசனம் கொடுப்பார்.தைப் பொங்கல் நாளில் அம்பாள் புறப்பாடு நடைபெறும். தைப்பூச நாளில் பெருமான் விண்ணாற்றிற்கு சென்று தீர்த்தம் கொடுப்பார். மாசி மாதம் தோறும் சிவராத்திரி நாளில் நான்கு கால பூஜை நடைபெறும். மாசி 18 முதல் ஒரு வார காலத்திற்கு சூரிய பூஜை நடைபெறும்.