Arulmigu Rethinapuriswarar Temple, Thirunattiyathankudi - 610202, Thiruvarur District [TM014379]
×
Temple History
தல பெருமை
பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட்டாடல் கண்டிகழேன்
பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன்
காணீராகிலும் காண்பனென் மனத்தால் கருதீ ராகிலுங் கருதி
நானேலும்மடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ
...பூணாண் ஆவதோர் அரவங்கண் டஞ்சேன் புறங்காட்டாடல் கண்டிகழேன்
பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன்
காணீராகிலும் காண்பனென் மனத்தால் கருதீ ராகிலுங் கருதி
நானேலும்மடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ
- சுந்தரர்
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டுரோடு சந்திப்பிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது.
சோழ மன்னன் ஒருவனுக்கும், அவனது தம்பிக்குமிடையே ரத்தினங்களை பாகம் பிரித்துத்தர இறைவன் ரத்ன வியாபாரியாக எழுந்தருளியதால் ரத்னபுரீஸ்வரர் என்று திருநாமம்.
சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்த போது ஈசனும், அம்மையும் உழவர் உழத்தியாக நடவு நட்டுக் கொண்டிருந்ததை, விநாயகர் சுட்டிக் காட்டினாராம். நட்டது போதும் கரையேறி வாரும் என சுந்தரர் அவர்களை அழைத்து ப் பாடிய திருத்தலம்.
யானை ஒன்று வழிப்பட்டதால் கரீநாலேசுவரர் என்றும் பெயர். திருக்கோயில் பின்னே கரிதீர்த்தம் உள்ளது. முன்புறம் சூரிய தீர்த்தம் ஐந்து நிலை இராஜ கோபுரமும் அழகிய பிராகரமும் கொண்ட பெரிய திருக்கோயில். அன்னை மங்களாம்பிகையாக எழுந்தருளியுள்ளார். தல விருட்சம் மாவிலங்கை.
கோட்புலி நாயனார் அவதரித்த தலம். அவரது இருபுதல்வியரை சுந்தரர் தனது புதல்வியராக ஏற்ற தலம். நாற்று நடவு உற்சவம் ஆடி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.