அருள்மிகு ரத்திணபுரீஸ்வரர் திருக்கோயில் பாலகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ளது. இது திருநாட்டியத்தான்குடி என்றும் அழைக்கப்படுகிறது. இத் திருக்கோயில் ஒரு ஐந்து நிலை இராஜகோபுரத்தையும் ஒரு பிரகாரத்தையும் கொண்டது.மேலும் அர்த்த மண்டபம், மகாமண்டபம் மற்றும் சோபணமண்டபம் உள்ளது. சுவாமி ஸ்ரீ ரத்திணபுரீஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை ஸ்ரீ மங்களாம்பிகை என்ற பெயர் கொண்டும் எழுந்தருளியுள்ளனர். மேலும் பிரகாரத்தில் முறையே விநாயகர், சுப்ரமண்யர், கெஜலட்சுமி, காசி விஸ்வநாதர்,சண்டிகேஸ்வரர், மற்றும் கோட்புலி நாயனார் சன்னதிகள் உள்ளன. இத் திருக்கோயிலின் முக்கிய திருவிழா நடவுத் திருவிழா ஆகும். இத் திருவிழா ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெறும். தஞ்சாவூர் மன்னரின் தளபதியான, சிறந்த சிவ பக்தரான கோட்புலி நாயனார் இந்த ஊரில் வசித்து வந்துள்ளார். புராணத்தின்படி சுந்தரமூர்த்தி சுவாமிகள்...