புராண பின்புலம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஆனந்த வல்லி மற்றும் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத் திருக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ளது. இத் திருக்கோயிலில் ஒரு நாகம் நீண்ட நாட்களாக வந்து சிவனை வழிபட்டு சென்றதாக செவி வழி செய்தியாக கூறப்படுகிறது.