தல பெருமை
மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் என மூன்று வகையான திருவருட் திருமேனி கொண்டு எழுந்தருளி இருக்கும் பஞ்ச மயமான ஸ்தலங்கள் காஞ்சி மயானம் கடவூர் மயானம் காழி மயானம வீழி மயானம் நாலூர் மயானம் ஐந்து மயானங்கள் ஆகும் இதில் வீழி மயானம் என்பது இத்தலத்தினை குறிக்கிறது இது திருவீழிமிழலை சுவாமிக்கு மயான சாஸ்திரமாகும் காவிரியின் கிளை நதியாகிய நடன காவிரி இன்னும் நாட்டாற்றின் தென்புறம் திருக்கோயில் அமைந்துள்ளது