தல பெருமை

ஒருவரும் நற்றமிழ்வல்ல ஞானப்பெருமான் தமது அடியார் கூட்டத்தினராடு முள்ளிவாய்க்கரையை அடைந்தபோது ஆறு பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த பெருவெள்ளத்தில் அகிலும் சந்தனமும் அடித்து வரப்பட்டு நீரின் வேகம் அதிகமாக இருந்ததாலும் ஓடக்காரர்கள் ஓடத்தை விடாமல் கட்டிவிட்டனர் ஆற்றின் அக்கரையில் இருந்த திருக்கொள்ளம்புதூர் உறை சிவனை வழிபட ஆர்வம் கொண்டிருந்த ஆளுடையப்பிள்ளையார் ஓடத்தை அவிழ்த்து அடியார்களை ஏறச்செய்து தானும்அமர்ந்து கொட்டமே எனத்தொடங்கும் பதிகத்தை பாட ஓடக்காரனுமின்றி சீறிப்பாயும் ஆற்றில் ஓடமானது குளத்தில் மிதக்கும் தெப்பம் போல் அன்னமென அசைந்து பதிகம் முற்றுப்பெருவதற்க்கு முன்பே திருக்கொள்ளம்புதூரை கொன்றை சேர் சடையான் திருவருளால் வந்நடைந்தார்கள்.