Screen Reader Access     A-AA+
அருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணமங்கை - 610104, தி௫வாரூர் .
Arulmigu Bhakthavatchala Perumal Temple, Thirukkannamangai - 610104, Thiruvarur District [TM014414]
×
Temple History

தல வரலாறு

இத்திருக்கோயிலில் உள்ள பெருமாள் மூலவர் 16 அடி உயரத்தில் மிகவும் கம்பீரமாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இரண்டு புறத்தில் ஸ்ரீ தேவி பூமிதேவி நாச்சியார்கள் உள்ளனர். நூற்றெட்டு திவ்ய தேசங்களில் இவரே பெரிய பெருமாள்.இப்பெருமாள் பிராட்டியின் திருமணக் கோலத்தை காண வந்த தேவர்களின் சிற்பங்கள் கருவறையின் நான்கு புறச் சுவர்களில் உள்ளன.

தல பெருமை

108 திவ்ய தேசங்களில் ஓன்று மகாலட்சுமி தவம் செய்து பக்தவத்சலப் பெருமாளைக் கைப்பிடித்த தலம் என்பதால் இவ்விடம் லட்சுமி வனம் என்றும் அழைக்கப்படுகிறது. சாபத்தால் துன்புற்ற சந்திரன் இங்கமைந்த புஷ்கரணியில் நீராடி சாபவிமோசனம் பெற்றான் என்பது தொன்நம்பிக்கை. திருமணக் கோலம் தினசரி காண முனிவர்கள் தேனீ வடிவில் உள்ளனர்.