Screen Reader Access     A-AA+
அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் சுவாமி, கச்சனம் - 610201, தி௫வாரூர் .
Arulmigu Kaichineswarar Temple, Kachanam - 610201, Thiruvarur District [TM014420]
×
Temple History

தல பெருமை

சம்மந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். ஆனால் காவிரிக்கும் இதற்கும் வெகு தூரம். கவுதம முனிவர் தன் மனைவி அகலிகை மீது இந்திரன் மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் நள்ளிரவில் சேவலாக உருவெடுத்து அவரது குடில் அருகிலிருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு குளிக்க கிளம்ப, அகலிகையும் வழியனுப்பி வைக்கிறார். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் வந்து அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் உன் உடலெங்கும் யோனியாக மாறக்கடவது...