இத்திருகு்கோயில் ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்தது, திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம், தேவேந்திரனின் கைவிரல்கள் லிங்கத்தின் மீது பதியப்பட்டு உருவாக்கப்பட்டதால் இத்தலம் கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் என்று அழைக்கப்பட்டது. அருள்மிகு கச்சனேஸ்வரர் திருக்கோயில், கச்சனம்- 610201, திருத்துறைப்பூண்டி வட்டம், தி௫வாரூர் மாவட்டம் . திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி வட்டம், கச்சனம் சிவன் கோயில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் 18 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் இருக்கிறது. பிரதான சாலையை ஒட்டி கோயில் உள்ளது. சம்மந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 122ஆவது சிவத்தலமாகும். இறைவன் - கைச்சினேஸ்வரர், கரச்சினேஸ்வரர். இறைவி - சுவேதவளை நாயகி, வெள்வளைநாயகி இறைவன் ஐராவதத்தின் தந்தங்களால் செய்யப்பட்ட தந்த வளையல்களை இந்திரன் காணிக்கையாக்கியதால் வெள் வளை...