Screen Reader Access     A-AA+
அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர் - 614704, தி௫வாரூர் .
Arulmigu Manthirapureeshwarar Temple, Koviloor - 614704, Thiruvarur District [TM014443]
×
Temple History

தல பெருமை

இத் திருக்கோவில் மிக பழமையானது. சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஸ்ரீ இராமபிரான் இலக்குவன் ஜாம்புவான் சுக்ரீவன் முதலியோர் படைச் சூழ இத்தலத்திற்கு வந்து வழிபட்டனர். இராமர் சேது பந்தனம் செய்வதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர ஆலோசனை பெற்றுச்சென்றார். ஆதலால் இறைவன் மந்திரபுரீஸ்வரர் என வழங்கப்படுகிறார். இராமர் இத்தலத்து இறைவனிடம் கடலில் அணை கட்டுவதற்கு வழி வகைகளை உசாவிய தலமாதலால் இவ்வூர் உசாத்தானம் என பெயர் பெற்றது. இராமர் இலங்கைக்கு செல்லவும் போரில் வெற்றி பெறவும் வேதாரண்யம் திருமறைக்காடு மீமிசல், மணல்மேல்குடி ஆகிய இடங்களில் அணை காட்டுகிறார். கடல் அலைகளும் மீன்களும் அணையை கலைத்து விடுகின்றனர். தடைகளை நீக்க வேண்டி இராமபிரான் இத்தலம்...