Screen Reader Access     A-AA+
அருள்மிகு சந்தானராமசாமி திருக்கோயில், நீடாமங்கலம் - 614404, தி௫வாரூர் .
Arulmigu Santhanaramaswamy Temple, Needamangalam - 614404, Thiruvarur District [TM014471]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயிலின் பெருமைகள் காசியாரண்யம் என்னும் ஆலங்குடி தலபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளன. தஞ்சையை ஆண்ட சிவபக்தி மிகுந்த பிரதாப சிம்ம மகாராஜா, திருவாரூரில் தியாகராஜப்பெருமானின் திருவிழாவை நடத்துவதற்காக அவ்வூரில் தங்கியிருப்பது வழக்கம். அவ்விதம் அரசர் தங்கியிருக்கும் காலத்தில் அரசரது தேவியார் யமுனாம்பாள் அம்மாள் அரண்மனையில் ஓர் இடத்தில் ராமரின் சிலை ஒன்று இருப்பதாக கனவுகண்டாள். அவ்விடத்திற்கு சென்று விக்கிரகத்தை எடுத்துவந்து வைத்து வழிபட்டு வந்தாள். பிறகு பிரதாப சிம்ம மகாராஜாவிடம் இச்செய்தியை தெரிவிக்கவே அவர் நீடாமங்கலத்துக்கு வந்து கிராமத்தை வாங்கி யமுனாம்பாள்புரம் என்று பெயரிட்டு முதலில் சத்திரத்தை கட்டுவித்தார். பிறகு பெருமாள் கோயில் திருப்பணி செய்வித்து அதில் இராமர் விக்கிரத்தை பிரதிட்டை செய்து கும்பாபிசேகம் செய்து கோவிலுக்கு வேண்டிய நிலங்களையும் தானம் செய்தார்....

தல பெருமை

தஞ்சை - திருவாரூர் நெடுஞ்சாலையில் நடுநாயகமாக விளங்கும் புண்ணிய ஸ்தலமான நீடாமங்கலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சீதாலெட்சுமி, ஸ்ரீ லெட்சுமணர் சமேத அருள்மிகு சந்தானராமசாமி திருக்கோயிலானது 1761 ஆம் ஆண்டு தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரான பிரதாப சிம்ம மகாராஜாவால் கட்டப்பட்டதாகும். இத்திருக்கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடனும், திரியங்க விமான அமைப்புடனும் காட்சியளிக்கிறது.அருள்மிகு சந்தானராமசுவாமி திருக்கோயில் திருக்குளமானது பண்டைய மராட்டிய மன்னர் (1761 ஆம் ஆண்டு பிராதப சிம்ம மகாராஜா) காலத்தில் யமுனாம்பாள் குளமாக அறியப்பட்டு திருக்கோயில் வரலாற்று குறிப்பில் சாகேத தீர்த்தம் எனும் புனித ...