Screen Reader Access     A-AA+
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருக்கரவாசல் - 610202, தி௫வாரூர் .
Arulmigu Thiyagaraja Swami Temple, Thirukkaravasal - 610202, Thiruvarur District [TM014477]
×
Temple History

தல பெருமை

சப்தவிடங்கர்களில் முதல் ஸ்தலம். ஆதிவிடங்கர் தியராஜர் என்னும் பெயர் பெற்றார் வருடம் 6 நாள்களில் விடங்கர் அபிஷேகம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பு இறைவன் 1000 கண்களுடன் பிரம்மனுக்கு காட்சி அளித்ததால் கண்ணாயிரநாதர் எனப் பெயர் பெற்றார் கண் பரிகார பூஜை செய்து எண்ணையை தலையில் தேய்த்து குளித்து வர கண் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம் ஆதிசேச பாம்புக்கு கண் கொடுத்த ஸ்தலம்

புராண பின்புலம்

ஒருமுறை பிரம்மாவுக்கு, தான் எல்லோரையும்விட பெரியவன் என்ற கர்வம் ஏற்பட்டதால் சிவபெருமானை வழிபடாமல் அலட்சியம் செய்தார். இதை உணர்ந்த சிவபெருமான், பிரம்மாவின் அகந்தையை அகற்ற வேண்டி, அவரின் படைக்கும் தொழிலைப் பறித்தார். பதவி பறிபோன பிரம்மா உண்மையை உணர்ந்து, மனம் திருந்தி, விஷ்ணுவின் உபதேசத்தால் காரை மரங்கள் நிறைந்திருந்த திருக்காரவாசல் வந்து தவம் செய்தார். சிவபெருமான், ஆயிரம் கண்களுடன் அவருக்குக் காட்சி தந்து அருள் புரிந்தார். எனவே, சிவபெருமான் கண்ணாயிரநாதர் என்று பெயர் பெற்றார். கருவறையில் கண்ணாயிரநாதர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார்.