Screen Reader Access     A-AA+
அருள்மிகு கிருபாசமுத்திரபெருமாள் திருக்கோயில், சிறுபுலியூர் - 609403, தி௫வாரூர் .
Arulmigu Kirupasamuthira Perumal Temple, Sirupuliyoor - 609403, Thiruvarur District [TM014479]
×
Temple History

தல பெருமை

சீர்மல்கும் தெய்வத்திருவருள் பொருந்திய தென்னகத்தில் எம்பெருமான் திருமாலவன் எழுந்தருளியிரக்கும் திருக்கோயில் பலவற்றுள் பாலவியாக்ரபுரம் என்ற சிறுபுலியூர் அருள்மிகு கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோவில் 108 வைணவ திருப்பதிகளுள் 11 பதியாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும் திருவரங்கம் போன்ற தெற்கு நோக்கிய சன்னதியைக் கொண்டும் சிறப்புற்று விளங்குகின்றது. ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் ஏற்பட்ட கொடிய பகை தீர அதிசேஷன் பல இடங்களுக்குச் சென்று ஓடி ஒளிந்து திரிந்து இறுதியில் இத்தலத்தில் தன்னைக் காக்க வேண்டி பெருமாளை நோக்கித் தவம் செய்ய மாசி சுக்லபக்ஷ ஏகாதசி அன்று அபயம் தந்து அவனை தனக்குச்சயனமாக ஏற்றுக் கொண்டு இங்குப் பால சயனமாக கன்வ முனிவருக்கும் புலிக்கால் முனிவருக்கும் திவ்யசேவை சாதிக்கிறார்....