Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், திருக்கொட்டாரம் - 609603, தி௫வாரூர் .
Arulmigu Irawatheeswarar Temple, Thirukottaram - 609603, Thiruvarur District [TM014480]
×
Temple History

தல பெருமை

ஒரு சமயம் தேவலோக யானையும், தேவேந்திரனின் வாகனமுமான வெள்ளை நிற ஐராவத யானை மீது இந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த துர்வாச முனிவர் சிவலிங்க பூஜை முடித்து இறைவனுக்கு சாற்றிய தாமரை மலரை ஐராவதத்தில் வந்து கொண்டிருந்த இந்திரனிடம் கொடுத்தார். செருக்குடன் அமர்ந்து வந்த இந்திரன் பிரசாதத்தின் பெருமை அறியாமல் ஒரு கையால் தாமரை மலரைப் பெற்று அதனை தன் யானை மீது வைத்தான். ஐராவத யானையானது அம்மலரை தன் துதிக்கையால் எடுத்து தூக்கி வீசி, காலால் மிதித்து விட்டது. இதனை கண்டு ஆத்திரமுற்ற துர்வாச முனிவர் கோபம் கொண்டு தேவேந்திரனையும், ஐராவதத்தையும் சபித்தார். அதன்படி ஐராவதம் தன் பெருமையை இழந்து பூலோகத்தில் ...