Arulmigu Sivaloganatha Swami Temple, Keeranoor - 609403, Thiruvarur District [TM014482]
×
Temple History
தல வரலாறு
இத்திருக்கோயிலில் ஸ்ரீசிவலோகநாதசுவாமி, ஸ்ரீகைலாசநாதசுவாமி, ஸ்ரீகாசிவிசுநாதசுவாமி மூன்று சன்னதிகள் தனித்தனியே அமையப் பெற்றுள்ளதால் மூன்று சிவாலய தரிசனம் கிடைக்கப்பெறுகிறது. ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ தெட்சணாமூர்த்தி, ஸ்ரீக்ஷீராம்பிகை சன்னதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளதால் இவற்றை தரிசிப்பவர்களுக்கு கல்வி அறிவு, ஞானம் உயர்ந்தோங்கும் என்று சொல்லப்படுகிறது. கோயிலின் முன் உள்ள திருக்குளத்தில் ( ஆனந்த கங்கை) நீராடி சிவலோகநாதரை தரிசிக்க உடல் பிணிகள் நீங்கி...இத்திருக்கோயிலில் ஸ்ரீசிவலோகநாதசுவாமி, ஸ்ரீகைலாசநாதசுவாமி, ஸ்ரீகாசிவிசுநாதசுவாமி மூன்று சன்னதிகள் தனித்தனியே அமையப் பெற்றுள்ளதால் மூன்று சிவாலய தரிசனம் கிடைக்கப்பெறுகிறது. ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ தெட்சணாமூர்த்தி, ஸ்ரீக்ஷீராம்பிகை சன்னதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளதால் இவற்றை தரிசிப்பவர்களுக்கு கல்வி அறிவு, ஞானம் உயர்ந்தோங்கும் என்று சொல்லப்படுகிறது. கோயிலின் முன் உள்ள திருக்குளத்தில் ( ஆனந்த கங்கை) நீராடி சிவலோகநாதரை தரிசிக்க உடல் பிணிகள் நீங்கி நலமடைவது திண்ணம். பிரதோஷ காலங்களில் தொட்ர்ந்து வந்து தரிசிப்பவர்களுக்கு நீண்ட ஆயுளும், நிறைவான செல்வமும் பெருகும். இத்தலத்தில் முதல் பிரகாரத்தில் கந்தவேள் திருக்கோயில் அமைந்துள்ளது. ஒரு திருமுகமும் இருகரமும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் வேடமங்கையும் வேழமங்கையும் விளங்கக் கிழக்கு நோக்கித் திகழ்கின்றார். உற்சவரும் மூலவர் போன்றே விளங்குகிளறார். நாடோறும் காரண, காமிகாகம முறையில் நான்கு கால வழிபாடு நிகழ்கின்றது. கோயிலுக்கு எதிரே ஆனந்த கங்கை என்னும் திருக்குளம் உள்ளது. சித்ரா பௌர்ணமி விழா சிறப்புடையது. இங்கே அருணகிரிநாத சுவாமிகள் முருகவேலை வழிபட்டு, ஈரமோடு சிரித்து .. என்ற திருப்புகழால் பரவிப் போற்றினார். இத்திருப்புகழில் பாற்கடல் கடைந்த வரலாற்றை அழகொழுகக் காட்டுகின்றார்.