தல வரலாறு

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் சைவ வைணவ ஒற்றுமையை பறை சாற்றும் சிறப்பு மிக்க திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டு காலம் பழமையானது. இத்திருக்கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் பிரதிஷ்டை செய்வதற்கு முன் நாகப்புற்று இருந்தது. ஆகையினால் நாக தோஷம் உள்ளவர்கள் ஆதிகேசவப் பெருமாளை தரிசித்தால் நாக தோஷம் நீங்கும் என ஐதீகம் உள்ளது.